loader
நிரப்புகிறது.....
Slider Image
8/8/2019 12:56:06 PM

 தங்கத்தை அள்ளிக் குவிக்கும் ஹீமா தாஸ்!
 
           19    வயதே ஆன அசாம் மாநிலத்தை சேர்ந்த  ஹீமா தாஸ்  ஒரு  ஓட்டப்பந்தய     புயல். ஏழ்மையான சூழ்நிலையில் பிறந்தவராக  இருப்பினும்  தனது  ஓட்டத்   திறமையால் இன்று  உலகையே  தனதுப்  பக்கம்  உற்றுப்  பார்க்க  வைத்திருக்கிறார்.
           கடந்த   மூன்று வாரங்களில் ஐரோப்பாவில்  நடைப் பெற்று வரும் பல்வேறு       ஓட்டப் பந்தய போட்டிகளில் ஐந்து தங்கப் பதக்கங்களை தட்டி   வந்து  நாட்டிற்கு  பெருமைச் சேர்த்துள்ளார்   ஹீமா!
      அடுத்த ஆண்டு 2020‡ல் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில்  தனது திறமையை மிளிரச் செய்வதற்காக ஹீமாதாஸ் தற்போதிலிருந்த தன்னை  தயார்ப்  படுத்தி  வருகிறார்.
         அசாமின்  நெளகாவும்  மாவட்டத்தைச்  சேர்ந்த திங்  நகரத்திலிருந்து வருவதால் இவரை “திங் எக்ஸ்பிரஸ்” என்று அன்போடு அனைவரும் அழைக்கின்றனர்.

Slider Image
7/4/2019 12:27:04 PM

எதிர் நீச்சல்

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை இல்லாமல் இல்லை! அதற்காக பலர் சோர்ந்திட நேர்ந்தாலும் பலர் அவற்றை எதிர்கொண்டு வெற்றியடைந்து கொண்டுதான் உள்ளனர். உடல் ஊனமடைந்திருந்தாலும் உள்ளத்தால் வெற்றிக் கொடியைப் பறக்க விட்டவர்கள் பலர். அத்தகையவர்களில் பெங்களூரைச் சேர்ந்த நிரஞ்சன் என்ற ஊனமுற்ற 24 வயது நிரம்பிய நீச்சல் வீரரை ஒரு உதாரணமாகக் கூறலாம். இவர் பிறப்பிலிருந்தே ஸ்பைனா பிபிடா என்ற தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டவர். இதை சரி செய்ய குதிரை சவாரி அல்லது நீச்சல் பழகும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். சிறிய நீச்சல் தொட்டில் ஆரம்பித்த பயிற்சி பெரிய நீச்சல் குளத்தில் அவரை சாதனை செய்ய தூண்டியது. 8 வயதில் ஆரம்பித்த பயிற்சி, அரை மணி ஒரு மணி எனத் தொடங்கி 9 மணி நேர பயிற்சி வரை முடிந்த போதிலும் எதற்கும் அயராதவர் நிரஞ்சன்! இதில் என்ன விசே­ம் என்றால் அவரது உடலில் 17 அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும் தனது விடா முயற்சியில் ஜீன் மாதம் நடைபெற்ற நார்வேஜியன் நீச்சல் சேம்பியன்´ப் போட்டியில் 200மீட்டர், 100 மீட்டர், 50மீட்டர் என பல்வேறு போட்டிகளில் 5 தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனைப் புரிந்துள்ளார். அவரது வெற்றி மந்திரங்கள்! 1. நீங்கள் யாருக்கும் குறைந்தவர் இல்லை! 2. தன்னபிக்கையும் தைரியமும் தேவை! 3 . ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உள்ளது, அதைக் கண்டுபிடித்து அதில் வெற்றியடை முயற்சி செய்ய வேண்டும்! 4. உங்கள் மனதிற்குப் பிடித்ததைச் செய்யவும் நீங்கள் செய்வதை விருப்பத்தோடு செய்யவும்!

Slider Image
5/18/2019 11:59:24 AM

திருச்சியைச் சார்ந்த தங்கப் பெண்மனி!

 கத்தார்  நாட்டில் தற்போது நடந்து வரும் 23 வது ஏசியன் அத்லெட்டிக் சேம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக தமிழகத்தைச் சோர்ந்த கோமதி என்ற 30 வயது பெண் 800 மீட்டர்  ஓட்டத்தில் முதல் தங்கப் பதக்கத்தை பெற்று சாதனைப் புரிந்துள்ளார்.

சாதாரண  விவசாயின் மகளான கோமதி தனது கடின உழைப்பு, விடா முயற்சி மூலம் இன்று தங்கப் பெண்ணாக ஜொலிக்கிறார். தற்போது வருமான வரித்துறையில் பணியாற்றி வரும் இவர், தனது தந்தையை இழந்த போதிலும் அவரது கனவை  நனவாக்கி  இந்தியாவின்  பெருமையை  நிலை நாட்டியுள்ளார்.
மென்மேலும் பதக்கங்களைக் வெல்ல  அவருக்கு  வாழ்த்துக்கள்!

Slider Image
4/15/2019 5:09:19 PM

பறக்கும் பெண்மணி

ராதிகா அஹிரே! ஜெட்  ஏர்வேஸ்  நிறுவனத்தில்  பணிபரியும்   25   வயது  ஏர்ஹேஸ்டஸ். இவர்   கடந்த   நவம்பர் 7ந் தேதி (2018 ஆம் ஆண்டு) மும்பையின் அந்தேரியில் உள்ள பல மாடிக்கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை தனது சாதுர்யத்தால் அணைத்து பெரும் விபத்தை தவிர்த்துள்ளார்.

பல மாடி கட்டிடத்தில் 9 வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தை கண்டவுடன் சிறிதும் அஞ்சாமல் படி  மூலம்  9வது  மாடித்  தளத்தை   அடைந்து  அங்கிருந்து  தீ  அணைப்பான்களை உபயோகப்படுத்தி  விபத்தின் இழப்பை  குறைத்தது குறிப்பிடத்தக்கது. இவருடன் இவரது சகோதரர் ரோஹித் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் மகேஷ் உறுதுணையாக இருந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் தீ விபத்தை  வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த போதிலும் இவர் விமானப் பணிகளுக்காக பெற்ற பயிற்சியை தக்க நேரத்தில் விவேத்துடன் உபயோகப்படுத்தியது பெருமை அளிக்கிறது.இவரது சாதனையை பாதிக்கப்பட்ட கட்டிடத்தில் வசிப்பவர்கள் ஒன்று கூடி  குடியரசுத்  தினத்தன்று   பறைச் சாற்றி மற்றவர்களுக்கும் எடுத்தக்காட்டாக  புகழ்மாலை  சூட்டியுள்ளனர். அவரது  புகழ் என்றும்  வானில் பறக்கட்டும்!.

Slider Image
1/23/2019 2:45:14 PM

பனி மனிதன்

 கோலின் ஒ பிராடி, 33 வயது அமெரிக்கர் 54 நாட்களில் சுமார் 1600 கி.மீ    தூரத்தை   தன்னந்தனியாக அண்டார்டிகாவின் வட-தென் திசையில் பயணித்து சாதனை புரிந்துள்ளார். எவ்விதமான  சாதனமும், துணையும் இன்றி இந்த சாதனை புரிந்துள்ள முதல் நபர் இவர். இவரின் முழு பயணமும் GPS மூலம் கண்காணிக்கப்பட்டதுடன் தொடர்ச்சியாக  அவரது இணையதளத்திளும்  பதிவேற்றம்  செய்யப்பட்டது  குறிப்பிடத்தக்கது.


தனது கடைசி 32 மணி நேரம் வாழ்க்கையில் மறக்க முடியாதது என்றும் முக்கியத்துவம்  வாய்ந்தது  என்றும்  கூறுகிறார்  கோலின்,

நவம்பர் 3ம் தேதி  170  கிலோ  எடையுடன்  கூடிய  பொருட்களை  எடுத்துக்  கொண்டு கொடிய பனிக்காற்றில்  மிகக்குரைந்த வெப்பநிலையில் பயணிப்பது இறப்பதற்கு சமமானது, என்று கூறினார் கோலின். பயணம் கிளம்பியதற்கும், முடிவதற்கும் இடைப்பட்ட  நேரத்தில்  தான் மிகவும்  வாடிய போதிலும்  சிரிப்பு, நடனம், அழுகை  என தனது  பயணத்தை  வெற்றிகரமாக  முடித்துள்ளார்.

 

Slider Image
1/4/2019 4:47:51 PM

சாதனைக்கு முன்னால் வயது தடையல்ல!

 தனது 99 ஆவது வயதில் கேரளாவைச் சார்ந்த சித்ரன் நம்பூதிரிபாத்  என்ற  ஓய்வு பெற்ற அரசு அலுவலர் இமய மலைகளில் 29 வது முறை ட்ரெக்கிங் செய்து சாதனை புரிந்துள்ளார். தனது நூறாவது வயதில் 30வது முறையை முடிக்க வேண்டும் என இப்பொழுதிலிருந்தே   தன்னை  தயார்ப்  படுத்தக்  கொண்டு  வருகிறார்.

1952-ல் ஆரம்பித்த இந்த முயற்சி இன்றும் இவரது விடா முயற்சியால் வெற்றிகரமாக  நடந்துக்  கொண்டு  வருகிறது.
 
தினசரி நடையும், மிதமான உணவும், அமைதியான வாழ்க்கையும் தன்னை ஃபிட்டாக வைத்திருப்பதாக கூறுகிறார். இந்த 99 வயது இளைஞர்! ஆம் வயது என்பது வெறும்   எண்ணிக்கையே,  மனதிற்கு  வயது  கிடையாது.

Slider Image
1/4/2019 3:13:02 PM

ஆசியாவின் புயல் பெண்மணி!

 ÖòÃm kB>Vª ¼k>Vºþ z_ïVM ¨[Å ¯ªVçkß ÄVìÍ> ØÃõ ·\Vì 29000 þ.*. #«Ýç> 159 åVâï¹_ çÄÂþ^ JéD ï¦Ím gEBVs[ AB_ ØÃõ\è ¨[Å ØÃòç\çB ¶ç¦Ím^áVì ¨ª ÖÍ]B ¼>EB sçáBVâ|ï^ þá© ¨ÐD ¶ç\©A ¶¤sÝm^ám. Ökì >ªm ÃBðÝç> gü]¼«oBVs[ ØÃìÝ  ¨ÐD  åï«Ý]_  Ø>V¦ºþ  ï_ïÝ>Vs_  x½Ým^áVì.  Îò  åVçáÂz  300 þ.*.  ¨[Å  T>Ý]_  Ökì  ÃBðD  ØÄFm  >ªm  ÄV>çªçB  °uÃ|Ý]  c^áVì.

            >ªm ÃBðÝ][ ¼ÃVm ÄJï s¼«V]ï¹[ >VÂz>_, ïV|ï^, \çéï^, kªséºzï^, ïVâ|Ýy, AB_, \çw  ¨ª  ¶çªÝmD  ¨]ì  ØïVõ| ÄV>çª AöÍ>  ØÃõ\è  Ökì.

            gü]¼«oBV. WREéVÍm, 益V, ¼ÃVìß·ï_, üØÃl[, ¸«V[ü, ØÃ_÷BD, ØÛì\M, ئ[\VìÂ, üT¦[, «iBV ¨[® Ãé åV|ïçá >[ªÍ>MBVï ·u¤ kÍ>kì ¨[Ãm z¤©¸¦Ý>Âïm. Eé Ö¦ºï¹_\â|D Ök«m ØÃu¼ÅVìï^ mçðBVïß ØÄ[Ūì.

            ÖºþéVÍ]_ c^á ¼ÃVì[\¡Ý Ã_ïçé ïwïÝ]_ sçáBVâ| ¼\éVõç\Ý  mçÅl_ ýÂzDØÃV¿m ÖÝ>çïB ¨õðD >ªÂzÝ ¼>V[¤B>Vï í®þÅVì.

            ÖÍ> ÄV>çªÂïVª Aïçw ¼k>Vºþ >ªm ØÃu¼ÅVìïÓÂz ¶ì©ÃèÝm^áVì! gD, ¼Ãu¼ÅVìï^ Ö_éV\_ ÄV>çª °m?

Slider Image
12/5/2018 12:15:23 PM

சாதனைகளுக்கு வயது தடையில்லை!

 ஆம்! சாதனைகளுக்கு வயது தடையாக இருக்கமுடியாது என்பதை கேரளாவைச் சேர்ந்த  96  வயது மூதாட்டி நிரூபித்துள்ளார். கேரள எழுத்தறிவு இயக்கம் நடத்திய நான்காம் வகுப்பிற்கானத் தேர்வில் 98% மதிப்பெண் பெற்று சாதனை நிகழ்த்திய  மூதாட்டிக்கு முன்னால் எந்த சாதனை நிற்க முடியும்!

கார்த்தியாயினியம்மாவின் இந்த முயற்சிக்குப் பின்னால் இருந்தது அவரது ஊக்கம்தான். இவரது மகள்  அம்மினி  அம்மாவும்  பத்தாவது  வகுப்பிற்கு  சமமான தேர்வில்  வெற்றிப்  பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது, இந்த பெண்மணியின் வயது 60.
 
கார்த்தியாயினியம்மாவால், தற்போது  செய்தித் தாள்கள், பத்திரிகைகளை தானாகவே  எவருடைய  உதவியுமின்றி  படிக்க  முடியும்  என்பது  குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னால் மழைக்கு கூட பள்ளிக் கூடம் பக்கம் ஒதுங்கியதில்லை. ஆலப்புழை மாவட்டத்தை சேர்ந்த இவர் ஒரு துப்புரவு பணியாளாகத் தொழில் புரிந்தவர். அடுத்தவர்களின் குப்பையை அகற்றியவர் இன்று கல்லாமை எனும் குப்பையை தன்னிடமிருந்து அகற்றியுள்ளார் என்பதில் மிகவும் மகிழ்ச்சி!

Slider Image
11/28/2018 3:19:25 PM

மேரி கோம் (Mary Kom)

 இந்தியா  மட்டுமல்ல  உலக அளவிலும் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பல சாதனைகளைப் புரிந்தவர் மேரி கோம். மணிப்பூரைச் சார்ந்தவர். ஐந்து முறை உலக சாம்பியன்ஷிப், ஒலிம்பிக்கில் பதக்கம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு பதக்கங்கள் என பல சாதனைகளை தன் வசமாக்கியவர். இளவயதில் குத்துச் சண்டைப் பழகுவதற்காக மைமாற்றுப் பணத்தில்தான் கையுறைகளை அவரால் வாங்க முடிந்தது. முயற்சி  ஒன்றே  அவரைப்  புகழின்  உச்சிக்கு  கொண்டுச்  சென்றது.

35 வயதான போதும், மூன்று குழந்தைகளுக்குத் தாயானபோதும் விடா முயற்சியுடன் மீண்டும்  தற்போது  டெல்லியில்  நடைபெற்று  வரும்   புணூயபு  பெண்கள் உலக சாம்பியன் போட்டியில் பங்கேற்று வருகிறார். இது மட்டுமல்ல,  2020ல் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் பங்குபெறத் தன்னை ஆயத்தமாக்கிக் கொண்டிருக்கிறார்.
 
வெற்றிக்கு வயது ஒரு தடையல்ல என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்  மேரி கோம்

Slider Image
11/8/2018 2:45:42 PM

தங்கப் பெண்மணி, மனு பாக்கர்(Manu Bhaker)

 அர்ஜென்டினாவில் தற்போது நடைப் பெற்று வரும் இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்று  நமது  நாட்டிற்கு  பெருமைச் சேர்த்துள்ளார். துப்பாக்கி  சுடும்  போட்டியில்  இந்தியாவின்  முதல்  தங்கம் என்பது குறிப்பிடத் தக்கது.

கடந்த இந்தோனேசிய ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இவர் பங்கேற்றாலும் எந்த பதக்கமும் இவருக்கு கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த பாக்கருக்கு 
தற்போதைய  தங்கம்  தன்னம்பிக்கையைக்  கொடுத்துள்ளது.
 
ஹரியானா மாநிலத்தின் ஜஜ்ஜர் மாவட்டத்தில் உள்ள கொரியா என்ற கிராமத்தைச் சார்ந்தவர் மனு பாக்கர்.

Slider Image
11/8/2018 2:38:05 PM

15 வயது இரும்பு மனிதன்!

 அர்ஜென்டினாவில் தற்போது நடைப்பெற்று வரும் இளைஞர்களுக்கான (Youth Olympics) ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மிசோரம் மாநிலத்தைச் சார்ந்த 15 வயது ஜெரிமி லால்ரின்னுங்கா என்ற சிறுவன், எடை தூக்கும் போட்டியில் (62 கிலோ பிரிவு) தங்கம் வென்று சாதனைப் புரிந்துள்ளார். இந்த ஆண்டு நடைப்பெற்ற ஏசியன் சேம்பியன்ஷிப்  போட்டியிலும்  வெள்ளி  மற்றும் வெண்கல பதக்கங்களை ஏற்கனவே பெற்று  இந்தியாவின்  நம்பிக்கை  நட்சத்திரமாக  விளங்கி  வருகிறார்.

Slider Image
10/22/2018 12:14:48 PM

ஏழ்மையைக் கடந்து சாதனை!

 மத்திய பிரதேசம் இந்தூரைச் சார்ந்த ஜுஹி ஜா என்ற 20 வயதுப் பெண், ஆசிய சாம்பியன்ஷிப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய அளவிற்கான கோ-கோ போட்டிக்கான டீமில் இடம் பெற்றுள்ளார்.

இதில் என்ன சாதனை என்கிறீர்களா? சுமார் 12 ஆண்டுகள் இந்தப் பெண் வசித்த இடம் ஒரு பொது டாய்லெட்டின் அறைதான். இவரது தந்தை இந்த டாய்லெட்டில் பராமரிப்பாளராக வேலைப் பார்த்து வந்தவர். அவருடன்  அவரது  குடும்பமும்  அங்குதான் வசித்து  வந்தனர். துர்நாற்றம்  வீசும் டாய்லெட்டில் வாழ்ந்த போதும், ஏழ்மையான நிலையில்  இருந்தபோதும் அவர் தன்னுடைய படிப்பிலும் விளையாட்டிலும் கவனம் செலுத்தி, தனது கடின உழைப்பாலும்  விடா  முயற்சியாலும்  தேசிய  அளவிலான  அணியில்  இன்று இடம் பெற்று இளைஞர்களுக்கு ஊக்கமாக விளங்குகிறார். ஏழ்மையும் வறுமையும்  சாதனை  செய்ய  நினைப்பவர்களுக்கு ஒரு போதும் தடையாக  இருப்பதில்லை  என்பதை   நிரூபித்துள்ளார்  ஜுஹி  ஜா.
 
இவரைப் பாராட்டி மத்திய பிரதேச அரசின் விளையாட்டுத் துறை விக்ரம் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

Slider Image
10/8/2018 2:18:49 PM

மிஸ். சென்னை

 உலகில் பல பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்துள்ளனர். இந்த சாதனைகளுக்குப் பின்னால் ஊக்கம் மட்டுமே காரணமாக இருப்பதில்லை. அவமானங்களும் பாதிப்புகளும் கூட சாதனைகளுக்கு அடித்தளமாக விளங்குகின்றன. இதற்கு உதாரணமாக  தமிழகத்தைச்  சார்ந்த  ரூபி பியூட்டி என்ற பெண்மணியை கூறலாம்.

உடல் பருமனாக இருந்ததால் கணவனால் கைவிடப்பட்டவர் இவர். ஆறு வயதில் ஒரு ஆண் குழந்தை. கணவனால் ஒதுக்கப்பட்ட இவர் மன வைராக்கியத்துடன் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மூலம் தனது எடையை குறைத்ததுடன் மட்டுமின்றி மன உறுதியுடன் ஃபிட்னஸ் பயிற்சி பெற்று இன்று மிஸ்.சென்னை பட்டம் பெற்று பெண்களுக்கு  வழிகாட்டியாக  திகழ்கிறார்.
 
பெரும்பாலான பெண்கள் ஒரு வருடத்தில் அடைய வேண்டிய இலக்கை, இவர்  ஆறு மாதங்களில் கடின பயிற்சி மூலம் தன்னுடைய இலக்கை அடைந்து வெற்றி வாகை சூடியுள்ளார், என அவரது பயிற்சியாளர் கார்த்தி கூறுகிறார்.
 
தன் உடலைப் பார்த்து வருத்தப்படும், வெட்கப் படும் பெண்களுக்கு  ஒரு  நம்பிக்கை நட்சத்திரமாக  இவர்  விளங்குவார்  என்பதில்  நமக்கு  மகிழ்ச்சி!
 

Slider Image
10/3/2018 3:11:18 PM

6.வெற்றிக் கனி !

 கடந்த மாதத்தில் நடந்து முடிந்த இந்தோனேசிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த தருண் அய்யாசாமி 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கம்  பெற்று  நம்மை  வியப்பில்  ஆழ்த்தியுள்ளார்.  இவர், 48.96 வினாடிகளில்  இந்த  சாதனையை  நிகழ்த்தி  புதிய  சாதனையைப்  படைத்துள்ளார்.

திருப்பூரைச்   சேர்ந்த  இவரது  வயது 21 மட்டுமே!  மேலும்,  மேலும்  இவர்   வெற்றி பெற  வாழ்த்துக்கள்!
 

Slider Image
9/27/2018 8:01:10 PM

5.அடிப் பட்ட பெண் புலி

   சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடைப் பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பற்றி அறிந்திருப்பீர்கள்.  அதில்  இந்தியாவைச்  சேர்ந்த  பல  இளம்  விளையாட்டு வீரர்கள்  வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர்! அவர்களில் ஒருவர்தான் இந்த அடிப்பட்ட பெண் புலி  ஸ்வப்னா பர்மன். 

 

          இவர் ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் பறித்துள்ளார்! இது 7 போட்டிகளை உள்ளடக்கிய  விளையாட்டு. இவரது  தந்தை ஒரு ரிகா ட்டி, தாய் தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவர். மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தைச் சார்ந்தவர்.  இரண்டு  கால்களிலும் ஆறு- ஆறு விரல்களை கொண்ட இவருக்குச் சரியான  விளையாட்டு  ஷீ  கூட  கிடைக்கவில்லை. 
 
          அது மட்டுமல்ல போட்டிக்கு இரண்டு மாதத்திற்க்கு முன்பிருந்தே முதுகுவலி, மூட்டுவலி, கணுக்கால் வலி என்று தொடர்ச்சியாக கடுமையான வலிகளால் அவதிப்பட்டு வந்தவர். ஆனால்  இவரது பயிற்சியாளர் சுபாஷ் சர்க்கார் கொடுத்த ஊக்கம் மற்றும் தனது தாயாருக்கு தங்கம் இல்லாமல்,திரும்ப மாட்டேன் என்று கொடுத்த வாக்கு ஆகியவற்றால் வலிகளை மறந்து, அடிப்பட்ட புலியாக பாய்ந்து தங்கத்தை தட்டிப் பறித்துள்ளார்! 
 
“விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் வெற்றிகளை அள்ளித் தரும்” என்பதை ஸ்வப்னா  பர்மன்  நிரூபித்துள்ளார்!
 

Slider Image
9/27/2018 7:58:17 PM

4.உருவு கண்டு எள்ளாமை வேண்டும்

  இந்த வார சாதனையாளர் மும்பையைச் சார்ந்த ஜென் சடாவர்தே  என்ற 10 வயது பெண்.

 
மும்பையில் தாதர் பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவர் என்ற 17 மாடிக் கட்டிடத்தில் தீடீரென்று தீப் பிடித்தது. தீ 12வது மாடியில் ஏற்பட்ட போதும் வேக வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது. அப்போது 10 வயதான இந்தப் பெண் தனது மாடியிலும்  மற்றப் பகுதியிலும்  உள்ளவர்களையும் தன்னுடையக் அறிவுக் கூர்மையால்  காப்பாற்றி  உள்ளர். இந்தப் பெண்ணால்  உயிர்  பிழைத்தவர்கள்  16 பேர். புகையைப் பார்த்தவுடன், இந்தப் பெண் அங்கிருந்தவர்களிடம் பதட்டமடைய  வேண்டாம் என்றும் ஈரமான துணி காட்டன் போன்றவற்றை  கொண்டு வாய் மற்றும் மூக்கினை  முடிக்கொண்டு  சுவாசிக்கவும்  வேண்டுகோள்  கொடுத்தார்.
 
           இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மூச்சு திணறாமல் இவர்கள்  படிவழியாக பதட்டமின்றி  இறங்கி  தன்னுயிரை காப்பாற்றிக்  கொண்டுள்ளனர். ஈரத் துணியினால் 16 மக்களின் உயிரைக் காப்பாற்றிய  சிறுமிக்கு  கோடி  வணக்கங்கள்.
 
         “உருவு  கண்டு எள்ளாமை  வேண்டும்”  என்ற வள்ளுவனின் வாக்கு இங்கு உயிர் காப்பாற்றியிருக்கிறது.
 

Slider Image
9/5/2018 6:16:21 PM

3. மனதில் உறுதி வேண்டும்!

 தற்போதைய  இளைஞர்கள்  ஏதாவதொரு  வேலையில் சேர்ந்துவிட்டாலே போதும், தான் உலகத்தை வென்றுவிட்டதாக நினைத்துக்கொள்கின்றனர். 

 
ஆனால், மானசி ஜோஷி என்ற 29 வயது பெண் ஆற்றிய சாதனை மகத்தானது. இந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற அகில உலக பாரா பாட்மிண்டன் போட்டியில் வெண்கல  பதக்கம்  பெற்ற  வீரப் பெண்மணி. இதில் என்ன அதிசயம்!  அவருக்கு  ஒரு கால்  இல்லை  என்பதுதான் முக்கியத்துவம் வாய்ந்தது. குஜராத்தைச் சார்ந்த சாஃப்ட்வேர்  பொறியாளரான  இவர்  ஏழு  ஆண்டுகளுக்கு  முன் நடந்த  சாலை விபத்தில்  தனது  ஒரு  காலை  இழந்தபோதிலும்  தனது  பாட்மிண்டன்   விளையாட்டை  கை விடவில்லை!
உடல் ஊனமாக இருப்பினும் மனதில் ஊனமில்லாதவர், மிகுந்த தைரியத்துடன் மன உறுதியுடன் தன் விளையாட்டை புறக்கணிக்காமல் தொடர் பயிற்சி மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பும் சில வெற்றிகளை குவித்த இவர் தற்போது இந்தோனேசியாவில் நடக்கவிருக்கும் பாரா - ஏஷியாட் விளையாட்டுப் போட்டிக்குத் தயார் படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது முக்கியம்.
 “முயற்சி  திருவினை  ஆக்கும்”  என்பதற்கு  இந்த  பெண்  ஒரு  உதாரணம்!
 

Slider Image
9/5/2018 3:10:19 PM

2.அர்ப்பணிப்பு ஆசிரியர்

 கடந்த பல நாட்களாக இந்தியா முழுவதும் மழை, வெள்ளம் தொடர்கிறது.மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறது. இருப்பினும்  இந்த  கஷ்டத்திலும் தன் கடமையைச் செவ்வனே செய்வதில் சிலர் எப்பொழுதுமே முன் மாதிரியாக விளங்குகின்றனர். ஆகஸ்ட்  மாதத்தின்  முதல்  வாரம் முதலே உத்தராகண்ட் மாநிலத்தில்  கடும் மழை எங்கும் வெள்ளக் காடு. ஆனாலும் அம்மாநிலத்தின் பித்தோர்கர்  மாவட்டத்தில்  தானிபாகர்  இலாக்காவில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியரான ஜோத் சிங் குன்வர், ஆற்றுப் பாலம் அடித்துச் செல்லப்பட்ட போதும் ஜிப்-லைன் மூலம் ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார்.

தன் உயிரையும் பணயம் வைத்து பள்ளிக்குச் செல்லும் ஆசிரியரின்  கடமைக்கு வாழ்த்துக்கள்!

Slider Image
9/5/2018 3:09:50 PM

1.முயற்சி உடையார் வெல்வது உறுதி !

இந்த பகுதி சமூகத்தின் சாதாரண நிலையில் இருந்து கொண்டு சாதனை நிகழ்த்தும் சகோதர, சகோதரிகளை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும். உலக அளவில் இல்லாவிட்டாலும் எவரெஸ்ட்டில் ஏறாவிட்டாலும்,அட்லாண்டிக் மகாசமுத்திரத்தை கடக்காவிட்டாலும்,ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு சகோதர, சாகோதரிக்கும்தான் தொட்டு விடும் உயரம் தான் வானம்.அது தான் சாதனை.கருவில் இருக்கும் குழந்தைக்கு பிறப்பது சாதனை.பிறந்த குழந்தைக்கு நடப்பது சாதனை.நடப்பவனுக்கு ஓடுவது சாதனை. எனவே உலகில் பிறந்த அனைவருமே சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.வாயப்புகளும், முயற்சிகளும் சாதனைக்கு உறுதுணையாக விளங்குகின்றன.ஒவ்வொரு வினாடியும் எங்கோ ஒருவன் சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றான்.
 
அத்தகைய சாமானிய மனிதனின் சாதனையை வெளிச்சம் போட்டு காட்டுவது தான் இந்தப் பகுதி. சாதிக்க நினைப்பவர்களுக்கு ஒரு தீப்பொறியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.சாதனைக்கு என்ன தேவை, இலக்கு .ஆம் இலக்கு நிர்ணயிக்கபட்டால் சாதிப்பது எளிது தடைகளை தாண்டுவது எளிது. இதற்கு எடுத்துக்காட்டு, 24 வயதான ஆஞ்சல்கங்வால் என்ற மத்திய பிரதேசத்தைச் சார்ந்த பெண்மணி.இவர் நீமச் மாவட்டத்தில் வசிக்கும்  சுரேஷ் கங்வால் என்ற தேநீர்க்கடைக்காரரின் மகள்.இவர் நிகழ்த்திய சாதனை என்ன  சமீபத்தில் வெளியான AFCAT என்ற தேர்வில் வெற்றிப் பெற்ற ஐந்து பெண்களில் முதலாமானவர், இந்த தேர்வு மூலம் இந்திய விமானப்படையில் சேரவிருக்கிறார்.
 
இவர் 12 வயதில் இருந்த போது உத்தராக்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து 
மக்களை காப்பாற்றுவதற்கு இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டார். அன்று விதைக்கப்பட்ட விதை இன்று முளைத்து தளிர்விட்டிருக்கிறது.படிப்பதற்கு தேவையான பணமும், வசதியும் இல்லாவிட்டாலும் தன்னுடைய தொடர் முயற்சியால் இன்று இந்த சாதனைய நிகழ்த்தி உள்ளார். இதற்கிடையில்பல்வேறு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றபோதும்.தன்னுடைய ராணுவ பணிக்கனவைவிடாமல் துரத்தி வெற்றி கண்டார். 5 முறை தோல்வி அடைந்தாலும் ஆறாவது முறையில் தன்னுடைய இலக்கை அடைந்தார். 
 
முயற்சி திருவினை ஆக்கும் என்ற வள்ளுவரின் வாக்குகாலத்தால் அழியாத உண்மை.