loader
நிரப்புகிறது.....
Slider Image
8/8/2019 1:18:55 PM

சந்திராயன் - 2

 
        சந்திரனுக்கு இந்தியா அனுப்பிய விண்கலமான சந்திராயன்‡1க்கு பிறகு, பத்தாண்டுகள்  கழித்து  அடுத்த  முயற்சியாக சந்திராயன்‡2 விண்கலம் வெற்றிகரமாக நமது விஞ்ஞானிகளால் ஏவப்பட்டுள்ளது.
                இதன்  சிறப்பம்சம்   நிலவின்  தென்  துருவத்தில் இந்த விண்கலம் இறங்கி ஆய்வு செய்ய விருக்கிறது. பொதுவாக நிலவின் மத்தியக் கோட்டில்தான் விண்கலங்கள் இறங்கி ஆய்வு செய்வது வழக்கம். ஆனால், சீனாவிற்கு அடுத்தபடியாக நமது நாடு இந்த புதிய முயற்சியை மேற்கொண்டிருப்பது அனைவருக்கும் பெருமையாகும். இந்த விண்கலம் நிலவிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் தனது •ற்றுப் பாதையை  அமைத்துக்  கொண்டு  தனது  ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் மங்கல்யான், சந்திராயன்‡1 க்குப் பிறகு  இந்த  நிகழ்வு  இஸ்ரோ  விஞ்ஞானிகளுக்கும்   நமது  நாட்டிற்கும்  உலகம்  தழுவிய  புகழை தேடித் தந்துள்ளது. மேலும் நமது விண்வெளித் திட்டங்கள் வெற்றியடைய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நமது வாழ்த்துக்களை  பரிசாக  அளிக்கிறோம்!

Slider Image
8/8/2019 12:42:28 PM

 

ÄÍ]«VB[ ‡2

          ÄÍ]«ÐÂz ÖÍ]BV ¶Ð©¸B sõïé\Vª ÄÍ]«VB[‡1Âz ¸Åz, ÃÝ>Võ|ï^  ïaÝm  ¶|Ý>  xBuEBVï ÄÍ]«VB[‡2 sõïéD Øku¤ï«\Vï å\m sÞQVMïáV_ °k©Ãâ|^ám. Ö>[  EÅ©ÃDÄD   Wés[  Ø>[  mòkÝ]_ ÖÍ> sõïéD Öźþ gF¡ ØÄFB sòÂþÅm. ØÃVmkVï Wés[ \Ý]B ¼ïVâ½_>V[ sõïéºï^ Öźþ gF¡ ØÄFkm kwÂïD. gªV_, æªVsuz ¶|Ý>ýBVï å\m åV| ÖÍ> A]B xBuEçB ¼\uØïVõ½ò©Ãm ¶çªkòÂzD ØÃòç\BVzD. ÖÍ> sõïéD WésoòÍm 100 þ.*. #«Ý]_ >ªm ·u®© ÃVç>çB  ¶ç\Ým  ØïVõ|  >ªm  gF¡© ÃèçB ¼\uØïV^ÓD \ºï_BV[, ÄÍ]«VB[‡1 Âz© ¸Åz  ÖÍ>  Wﵡ  Öü¼«V  sÞQVMïÓÂzD   å\m  åVâ½uzD  céïD  >¿sB  Aïçw ¼>½Ý >Ím^ám. ¼\KD å\m sõØk¹Ý ]⦺ï^ Øku¤Bç¦B ¶çªÝm sÞQVMïÓÂzD å\m kVµÝmÂïçá  ÃöÄVï  ¶¹Âþ¼ÅVD!

Slider Image
7/4/2019 12:11:42 PM

மக்கள் தொகை அதிகரிப்பு!

ஐக்கிய நாடுகள் அமைப்பின், சமூக பொருளாதார மக்கள் தொகைப் பிரிவு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் படி 2027 ல் உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா தலையயடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 2019 -2050 க்கு இடைப்பட்ட காலத்தில் சீனா உள்ளிட்ட •மார் 55 நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி குறையவிருக்கிறது. ஆனால் தற்போது •மார் 1.37 மில்லியன் மக்கள் தொகைக் கொண்ட நமது நாடு 2028 ல் •மார் 1.45 மில்லியன் மக்கள் தொகையை எட்டும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 1950 ல் 37.6 கோடியாக இருந்த நமது மக்கள் தொகை பல மடங்கு உயர்ந்தன. விளைவாக நாட்டில் பல சமூக பொருளாதர விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. மக்கள் தொகை அதிகரிப்பால் இந்தியாவின் நீர் மற்றும் நில வளங்கள் மீதான உபயோகம் கடுமையாக அதிகரித்துள்ளது. உணவுத் தேவை அதிகரிப்பு காரணமாக வேளாண்துறை இன்று இரசாயனங்களின் நுகர்வு துறையாக மாறி •ற்றுச் •ழலை பாதிப்பதுடன் மக்களுக்கும் விலங்குகளுக்கும் புதிய புதிய நோய்களை உருவாக்கி வருகின்றன. மக்களின் ஏழ்மை நிலையில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அடிப்படைத் தேவைகளான உணவு இருப்பிடம் குறித்து முழுமையான வளர்ச்சி மற்றும் தேவை பூர்த்தி இன்னும் ஏற்படவில்லை. இதுமட்டுமன்றி படித்த இளைஞர்களுக்குப் போதுமான வேலை வாய்ப்புகள் இன்னும் ஏற்படவில்லை. நாடு முழுவதும் நீர் , நிலம், உணவு, மின் உற்பத்தி, இருப்பிட வசதிகள், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, ஏழ்மை ஒழிப்பு என பல துறைகளில் நாம் பெரிய சாவல்களை எதிர் நோக்கி காத்திருக்கின்றோம். நமது நாட்டைப் பொருத்த வரையில் தென்னிந்திய மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப் படுத்திய போதிலும் வட இந்திய மாநிலங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்! இல்லாவிட்டால் உலகின் ஆறாவது பெரியப் பொருளாதாரம் என்ற நிலை நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை வெளிப்படுத்தாது! தற்போதைய முயற்சி மக்கள் தொகை கட்டுப்பாட்டை நோக்கி அமைய வேண்டும், என்பதே அனைவரின் விருப்பம்.

Slider Image
5/18/2019 12:05:23 PM

உலகப் புத்தக நாள்

 “புத்தகத்தைப் போன்ற சிறந்த நண்பன் அதுவும் நம்பிக்கை மிகுந்த நண்பன் வேறு  எதுவும்  கிடையாது”, எர்னெஸ்ட் எமிங்வே

புத்தகங்கள் என்பது வெறும் மையினால் காகிதத்தினால் ஆனதல்ல! அவை  அறிவின்  விதை! மாற்றத்தின் தூண்டுகோல்! வாழ்வில் ஒளியேற்றும் விளக்கு!
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ந் தேதி உலகக் புத்தக தினமாக 1995 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.வில்லியம் ஷேக்ஸ்பியர், மிகுள் செர்வான்டெஸ் இன்கா கார்சிலாஸோ போன்ற மேதைகளின் நினைவு நாள்தான் யுனஸ்போ மூலம் உலகப் புத்தக தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஷார்ஜா நகரம் உலக புத்தக தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.புத்தகங்கள் உலகின் கலை, இலக்கிய, கலாச்சாரங்களை ஒரு தலை முறையிலிருந்து  மறு  தலைமுறைக்கு எடுத்து  செல்வதுடன் கலாச்சார பரிமாற்றங்களுக்கும் அறிவு  பரிமாற்றங்களுக்கும் வழி வகை செய்கிறது. உலகில் ஏற்பட்ட பெரும்பாலான கண்டு பிடிப்புகள், சமூக மாற்றங்கள்,அரசியல் மாற்றங்கள் என எதை எடுத்துக்கொண்டாலும்  அவற்றின்  பின்னால்  புத்தகங்கள்  இருப்பது  விளங்கும்.
எனவே நல்ல புத்தகங்களை வாசிக்க வேண்டியது நமது கடமை மட்டுமல்ல! நாம் அனைவரும் இதை வாசிப்பு இயக்கமாக மாற்ற வேண்டியது அவசியமாகும். புத்தக வாசிப்பின்  முக்கியத்துவத்தை  அறிஞர் அண்ணாவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி மூலம்  தெரிந்து  கொள்ளலாம்.
நோயுற்றிருந்த அண்ணாவிற்கு அறுவை சிகிச்சை இன்றே செய்யப்பட வேண்டும் என மருவத்துவர் கூறுகிறார். ஆனால் அண்ணாவோ அறுவை சிகிச்சையை நாளை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார் மருத்துவர் ஏன் நாளை, என்ன நல்ல நாளா? என்று  வினவ  அண்ணா கூறுகிறார், இல்லை, ஐயா! நான் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன்,அதை முடித்தவுடன் அறுவை சிகிச்சையை வைத்துக் கொள்ளுங்கள் என்றேன் என பதில் அளித்தார். இதிலிருந்து புத்தகங்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.

 
 

Slider Image
4/16/2019 11:10:18 AM

சின்ன தம்பி அல்ல, பெரியத் தம்பி !

 கடந்த  சில  வருடங்களாகவே தமிழகத்தில்  சின்ன தம்பி என்ற யானையால் ஏற்பட்டுவரும்  தொல்லைகள் சொல்லிமாளாது. ஆனால்  சின்னத்தம்பியை  குறைச் சொல்லும்  மக்கள்  விவசாயிகள்  மற்றும்  இதரப்பிரிவினர்  முதலில்  தங்களது  தவறுகளை இனம்     கண்டு களைய  வேண்டும். கடந்த பல ஆண்டுகளில் வனப் பகுதிகள் அழிக்கப்பட்டதுடன்  மட்டுமன்றி  ஆக்கிரமிப்புகள்  யானைகளின் வழித்தடங்களை அழித்து வருவது இத்தகைய  யானை  மனிதன்  மோதலுக்கு  வழி வகுத்துள்ளது. 

           கடந்த   மூன்று ஆண்டுகளில்  அரசு புள்ளி விவரப்படி  2015-18 ஆம்  ஆண்டுகளில்    373   யானைகள்  இறந்துள்ளன. மின்  கம்பிகள்  மூலம் 226 யானைகளும்  ரயில் விபத்தில் 62 யானைகளும் வேட்டையாடுதல்  மூலம் 59 யானைகளும் விஷ­ம் மூலம் 26 யானைகளும்  இறந்துள்ளன. இதேக் காலக்கட்டத்தில் யானைகள் மூலம் இறந்துள்ள மனிதர்களின்   எண்ணிக்கை 1713 ஆகும். இத்தகைய மோதல் ஏற்பட காரணம்  யானைகளின்   வாழிடங்கள் அழிவதும் வழிதடங்கள்  அழிவதும் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவது மேயாகும். எனவே   மனிதன்  சின்னத்     தம்பியை   வேட்டையாடுவதை விட்டு விட்டு  தனது  பேராசைகளை   குறைத்துக் கொண்டால்தான் யானைகள் பாதுகாக்கப்படும். இத்தகைய   மோதல்கள் எதிர் காலத்தில்   நிகழாமல்  தடுக்க  வேண்டியது   மனிதர்களாகிய  நமது  கைகளில்தான்  உள்ளது.

Slider Image
1/23/2019 1:45:19 PM

மாணவர்களா இல்லை விலங்குகளா?

 2018 ஆம் வருடத்தில் மட்டும் ஏறக்குறைய 20 மாணவர்கள் ராஜஸ்தானில்      உள்ள  கோட்டாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. டிசம்பர்  மாதத்தில் 4 நாட்களில் 3 பேர் தங்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். கோட்டா    வட  இந்தியாவில்  தனியார்  பயிற்சி  நிறுவனங்களின்  தலைநகரமாகத்   திகழ்கிறது. 


          அங்கு  ஆயிரக் கணக்கான மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை வளமாக்க பயிற்சி என்ற கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். கடுமையானப் போட்டி, பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் அழுத்தம் மாணவர்கள் மேல் தேவையின்றி திணிக்கப்படுகிறது. பொறியியல், குறிப்பாக ஐ.ஐ.டி.க்கான நுழைவுத் தேர்வு மற்றும் நீட் தேர்விற்கு மாணவர்கள்  இங்கு  தங்கி  தங்களை தயார் படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஐ.டியில் உள்ள சுமார் 15000 இடத்திற்கு 10 லட்சம் மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதி வருகின்றனர். இக்காலப் பெற்றோர்கள், மாணவர்களுக்கு பணம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. வாழ்வதற்காகத்தான் பணம் தேவையே ஒழிய, பணத்திற்காக வாழ்க்கை இல்லை! என்பதை  இவர்கள் உணர்ந்து கொண்டால்தான் இத்தகைய இழப்புகளை தவிர்க்க முடியும்.

 

Slider Image
1/23/2019 1:39:31 PM

ஒரு துளி இரண்டு உயிர்கள்!

 தமிழகத்தின்  சாத்தூரை  சார்ந்த  ஒரு  கர்ப்பிணி  பெண்ணுக்கு HIV  தொற்று   ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பரிசோதனைக் கூடத்தில் நடந்த  மனித தவறு ஒரு கர்ப்பிணி பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடிவிட்டது. தவறு நடக்க காரணமாக இருந்த மூன்று தொழில்நுட்ப வல்லுனர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட அப்பெண்ணின், குழந்தையின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது. அரசு அந்தப் பெண்ணிற்கு வேலை மற்றும் வீடு, ஆரோக்கியச் செலவு என அனைத்து  உதவிகளை  செய்தாலும்  நடந்த  தவறுக்கு  சமமாகாது. 


          அதுமட்டுமின்றி கிருமி தொற்றிய ரத்தத்தை தானமாக அளித்த நபரும் தற்கொலை செய்து கொண்டது மிகவும் வருந்தத்தக்கது. தனக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பது தெரிந்தவுடன் அவர் சம்பந்தப்பட்ட ரத்த வங்கிக்கு தொடர்பு கொண்டு தனது ரத்தத்தை எவருக்கும் ஏற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு முன்பாகவே ரத்த பரிமாற்றம் கர்ப்பிணி பெண்ணுக்கு செய்யப்பட்டு விட்டது. அரசு   உயர்தர  மருத்துவ  சிகிச்சை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளித்தாலும் நிகழ்ந்த தவறு தமிழகத்தில் ஒரு களங்கமாகவே காணப்படும்.

எதிர்காலத்தில் இத்தகையத் தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

 

Slider Image
1/4/2019 4:13:50 PM

கள்ளத் தனமான சுரங்கப் பணிகள்

 டிசம்பர்  13  ஆம் நாள் மேகாலயாவின் 13 தொழிலாளர்களுக்கு ஒரு மோசமான நாள்.  ஜைந்தியா மலைகளில் உள்ள மூடப்பட்ட நிலக்கரிச் சுரங்கத்தில் நிலக்கரி எடுப்பதற்காக நுழைந்த இவர்களின் கதி என்ன, என்று இதுவரை தெரியவில்லை. 

             எலி-வலை சுரங்க முறைகளை 2014ஆம் ஆண்டே தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை  செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த தடையை பொருட்படுத்தாமல் தங்களது சொந்த ஆதாயத்திற்காக  இந்த  தொழிலாளர்கள்  மாட்டிக்  கொண்டுள்ளனர்.   பணத்தாசைப்  பிடித்தவர்களின்  கைப்பாவையாக  வேறு  வழியின்றி இத்தகைய தொழிலில் ஏழை மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு மாட்டிக் கொண்டுள்ள 13 தொழிலாளர்களை  மீட்க  தேசிய  பேரிடர்  மீட்பு  படை  ஈடுபட்ட  போதிலும் சுரங்கத்தின் அதிக நீர் அளவு காரணமாக மீட்புப் பணியில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
 
சான்  சுரங்கத்தில்  ஏற்பட்டுள்ள  நிகழ்ச்சி முதன் முறையல்ல, ஏற்கனவே இதுபோன்ற  விபத்துக்கள்  ஜார்க்கண்ட்  மாநிலத்திலும்  நடந்துள்ளது.
 
இத்தகைய நிகழ்வுகளைத் தவிர்க்க சுரங்கங்களில் பாதுகாப்பு முறைகளை பலப்படுத்தவேண்டும், மேலும் கள்ளத் தனமான சுரங்கப் பணிகள் மீது கடுமையாக நடவடிக்கை  மேற்கொள்ளப்பட  வேண்டும்.

Slider Image
12/27/2018 12:07:58 PM

அழிக்கப்படும் புலிகள்

 உலகில்   வாழும்   புலிகளில்  பெரும்பான்மையானவை இந்தியாவில்தான் உள்ளன. அழிந்து வரும் புலிகளை காப்பதற்காகவும், புலிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் 1973-ல் “புராஜெக்ட் டைகர்”  எனும்  திட்டம்  அரசால்  ஆரம்பிக்கப்பட்டது.

சமீபத்தில் கணக்குப் படி சுமார் 2,200 புலிகள் இந்தியாவில் உள்ளன. பல ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. போதிலும் அவற்றின் வாழிடங்கள் குறைந்து வருவதால் பல இடங்களில் மனிதர்களும். கால் நடைகளும் தாக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் கவனிக்கப்பட வேண்டியது  என்னவெனில்  கடந்த  10  ஆண்டுகளில்,  2008 முதல் 2018 (நவம்பர்) வரை 384 புலிகள் கொல்லப்பட்டதாக வனவிலங்குகள் குற்ற தடுப்பு ப்யூரோ கூறுகிறது. இவற்றை  வேட்டையாடியதாக  961 பேர் மீது  நடவடிக்கை  எடுக்கப்பட்டு  வருகிறது.
 
இது ஒரு புறமிருக்க, புலிகளின் வாழிடம், பொருளாதார காரணங்களுக்காக கொண்டு  வரப்படும்  அணைகள், தொழிற்சாலைகள், நீர்மின் திட்டங்கள், காடுகள், அழிப்பு திட்டங்கள்   ஆகியன  மூலம் அழிந்து வருவதை மறுக்க இயலாது. புலிகளும் இந்த பூமியின் ஒரு உயிரனம்தான். அவைகள் வாழ்வதற்கான உரிமையை நாம் பறிக்க முயற்சித்தல்  கூடாது. இல்லாவிட்டால், புலிகள்  விரைவில்  அழிவதை  தடுக்க  முடியாது.

Slider Image
12/27/2018 11:59:31 AM

திண்டாடும் தமிழக இளைஞர்கள்!

 நமது நாட்டைப் பொறுத்தவரையில்  ஓராயிரம் பிரச்சினைகள். ஏழ்மை, வறுமை, கல்வி, அறிவின்மை, போதுமான அளவிற்கு தொழில் வளர்ச்சியின்மை என்று சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் மக்கட் தொகைப் பெருக்கும்! இருந்தாலும், தற்போதைய நிலையில், தமிழகம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி விட்ட போதிலும். பெருகி வரும்  வேலையின்மை, இளைஞர்களின் வாழ்க்கையைக்  கேள்வி  குறியாக்கியுள்ளது,

2015-16 ஆம் ஆண்டில் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் வேலையின்மை   விகிதம்  3.8%  ஆக உள்ளது. தெலங்கானாவில் 2.7% ஆக  உள்ளது.  தேசிய  அளவில்  இந்த  விகிதம்  3.7%  ஆகும்.
 
கல்வியறிவில், குறிப்பாக உயர் கல்வியில் தமிழகம் முதல் இடத்தில் இருந்தாலும், படித்தவர்களுக்கு வேலையில்லாத  நிலையே  காணப்படுகிறது. கிட்டத்தட்ட  80 லட்சம்   பேர் தமிழகத்தின் பல்வேறு வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்துவிட்டு இலவு காத்த கிளியாக உள்ளனர்.
 
போதுமான அளவிற்கு வேலைகள் உருவாக்கப்படாதது ஒரு காரணம் எனில், தொழில்நுட்பம்  மற்றொரு  காரணமாகும்.  அது  மட்டுமின்றி  வேலைக்கேற்ற திறமைகளை படிப்புகள் உருவாக்காததும் ஒரு காரணமாகும். படித்து முடித்தவுடன்தான், தெரிய வருகிறது அவர்களுக்கேற்ற வேலைவாய்ப்பு இல்லை என்பது.
 
நாட்டின் எதிர்காலமாகத் திகழும் இளைஞர்களுக்குத் தேவை ஒரு தெளிவான வழிகாட்டி.

Slider Image
12/5/2018 1:38:52 PM

அந்தமானில் கொல்லப்பட்ட அன்னிய நாட்டவர்!

 அந்தமான், ஒரு தனியாக அமைந்துள்ள தீவுத் தொகுப்பு, அங்கு பல பழங்குடி இனத்தினர் காட்டுக்குள் வசித்து வருகின்றனர். ஜாரவா, சென்டினெல் போன்ற இனத்தினர் முக்கியமானவர்கள். அம்மக்கள் தாம் வசிக்கும் பகுதிக்குள் எவரையும் அனுமதி அளிப்பதில்லை. ஏறக்குறைய 30,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பழங்குடியினர் இப்பகுதியில்  வாழ்வதாகக்  கூறப்படுகிறது.

அங்குதான், வடக்கு சென்டினெல் தீவுப் பகுதியில் ஜான் ஆலன் செள என்ற வெளிநாட்டுப் பயணி ஒரு பழங்குடி மனிதனால் அம்பினால் தாக்கப்பட்டு இறந்துள்ளார். பொதுவாகப் பழங்குடிப் மக்கள், குறிப்பாக அந்தமானில் வசிப்பவர்கள் மிகவும் தனிமை விரும்பிகள். தங்களது  இருப்பிடத்திற்குள்  அயலாரை  அனுமதிப்பதில்லை.  இதையயல்லாம்  தெரிந்து கொண்ட ஒரு நபர், ஏன் அங்குச் சென்றார் என்பது புரியாத புதிராக   உள்ளது. அவர்  பழங்குடியினரை  மதமாற்றம்  செய்வதற்காகச்   சென்றார்  என்றும் கூறப்படுகிறது. 
 
              எதுவாக இருப்பினும், பழங்குடி மக்களை யாரும் தொந்தரவு செய்யாமல் அவர்களது இஷ்டப்படி அவர்களது  வாழிடத்தில்  வசிப்பதை  உறுதி செய்ய வேண்டும்,  ஒவ்வொரு  இனத்திற்குமான அடிப்படை வாழ்வுரிமை இது. அவர்களை நவீனமாக்குகிறோம் என்ற  பெயரில்  தேவையற்ற தொல்லைகளை உருவாக்க கூடாது. அதை  மீறிச்  செயல்படும் பொழுதுதான்  இது போன்ற  நிகழ்வுகள்  ஏற்படுவது  தவிர்க்க  முடியாததாகி விடுகிறது.

Slider Image
12/5/2018 1:27:28 PM

கஜா புயலும் தமிழகமும் !

 வருடா  வருடம்  திருவிழா  வருவது  போல்  ஏதாவது ஒரு பெயரில் புயல் தமிழகத்தை தாக்குவது வழக்கமாகிவிட்டது. தானே, ஒக்கி, தித்லி என்று வெவ்வேறு விதமான பெயர்கள். இந்த ஆண்டு வந்தது கஜா! கடந்த பத்து தினங்களுக்கு முன் வந்த இந்தப்  புயல் தமிழகத்தின் நெற் களஞ்சியத்தை போர்க் களமாக மாற்றியுள்ளது. ஆம். மக்கள்  தங்கள்  வாழ்க்கையுடன்  போரிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு பக்கம் ஐம்பதுக்கும் அதிகமான உயிரிழப்புகள். ஆயிரக்கணக்கான கால்நடைகளும்  விலங்குகளும் உயிரிழந்ததால் விவசாயக் குடும்பங்களுக்கு பேரிழப்பு. தென்னை  மரங்கள்  தலைகீழாக  வீழ்ந்து கிடக்கின்றன,  மாவட்ட மக்களைப் போலவே! மாமரங்களும்  பிற மரங்களும் வேரோடு பிடுங்கப்பட்டு தூக்கியயறியப் பட்டிருக்கின்றன, வழக்கமான  வாழ்க்கை  எப்படி  தூக்கியயறியப்  பட்டுள்ளதோ  அதைப்  போன்று! 
 
            தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, சிவகங்கை, நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை என  சோழ மண்டலத்தை  கஜா  இல்லாத  இடமாக்கிவிட்டது. இம்மாவட்டத்தின் விவசாயிகள் தற்போது உணவிற்காகவும் குடி தண்ணீருக்காகவும் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.பல பகுதிகளில் மின்சாரம் கிடையாது. மின் கட்டமைப்புகளும் புயலால் பிடுங்கியயறியப்பட்டுள்ளன. நிவாரண பணிகள் வழக்கம்போல நடந்து வந்தாலும் தாக்குதலின் கொடூரம் அதிகம் என்பதால் நிவாரணம் வழங்குவதில் தாமதம். இதனால் மக்களின்  கோபம்  ஒருபுறம்  வன்முறைக்கு வழிகோலியிருக்கிறது,
 
இத்தகைய நேரத்தில் அரசும், அரசு சாரா அமைப்புகளும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை  குறிப்பாக  குடிநீர்  உணவு, மின்  வசதிகளை  உடனடியாக ஏற்படுத்தி தரவேண்டும்.
பேய்க்கு  வாழ்க்கைப்பட்டால்  அதனுடன்  சேர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அதுபோன்று தமிழகமும் புயலுடன் வாழ்க்கை என்று தெரிந்துகொண்டு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், விவசாயிகள், மீனவர்களின் துயரம் மற்றும் பொது உடமைகளுக்கு ஏற்படும்  நஷ்டம்  ஆகியவற்றை  தவிர்ப்பது  இயலாத  காரியம்  ஆகிவிடும்.
 
விவசாயிகளுக்கு மட்டுமின்றி மீனவர்களின் வீடுகள், மீன்பிடிக் கப்பல்கள், வலைகள், உப்புத் தயாரிப்பாளர்களின் பல நாள் உழைப்பான உப்பு போன்ற இந்தப் புயலால் நாசமடைந்துள்ளன. மழையில் அழும் விவசாயிகளின் கண்ணீர் துளிகளை துடைக்க  வேண்டியது  நமது  ஒவ்வொருவரின்  கடமை.

Slider Image
11/28/2018 4:56:12 PM

அதிகரித்து வரும் காய்ச்சல் நோய்கள்!

 மழைக் காலம் ஆரம்பித்தவுடன்  ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் பல்வேறு விதமான  காய்ச்சல்  நோய்கள்  குறிப்பாக டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்றவை அதிகரித்து வருகிறது வழக்கமாகிவிட்டது. அரசுத் தரப்பில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இந்த நோய்கள் மூலம் ஏற்படும் இறப்புகளை குறிப்பாக குழந்தை இறப்புகளை காணும் பொழுது பெரியக் கேள்வி குறி கண்முன் தோன்றுகிறது. 

          இத்தகைய காய்ச்சல் நோய்களுக்கு கொசு, அசுத்தமான சூழல் போன்றவை காரணமாக இருந்தபோதிலும், மக்களும், அரசும், அரசு சாரா அமைப்புகளும் முன்தடுப்பு நடவடிக்கைகளில் போதிய கவனம் செலுத்துகிறதா என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் உயிர் இழப்புகள் ஏற்படும்பொழுது போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் இதே வேகம் முன் தடுப்பு நடவடிக்கைகளில் எடுக்கப்படுகின்றனவா  எனத்  தெரியவில்லை. 
 
            கல்வி, சுகாதாரத்தில் முன்னனி மாநிலமாக திகழும் தமிழகம் இந்த நோய்களை முற்றிலும் தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியமாகும். குறிப்பாக மக்கள் தங்களது சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளும் குப்பைக் கூளங்களை கையாளுவதில் திறன்பட செயல்பட வேண்டும். இல்லாவிட்டால்  இந்த  நோய்களால்  ஏற்படும் உயிரிழப்புகள் தமிழகத்திற்கு ஒரு களங்கமாக மாறிவிடுவது மட்டுமல்ல பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வில் ஒரு பெருந்துயராகவும்  அமைந்து விடும். இதனைத் தவிர்க்க அனைவரும் இணைந்து செயல்பட  வேண்டியது  காலத்தின்  கட்டாயம்.

Slider Image
11/17/2018 3:38:10 PM

நலிந்த இளைய பாரதம்

 இந்தியாவில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் ஐந்தில் ஒருவருக்கு போதுமான ஊட்டச் சத்து கிடைப்பதில்லை. போதுமான உணவு கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு வயதிற்கேற்ற எடை, உயரம், இருப்பதில்லை. மேலும் ஊட்டச் சத்துக் குறைபாடால் நோய் எதிர்ப்பும் குறைவாக உள்ளது. இதனை நாம் கூறவில்லை! குளோபல் ங்கர் இன்டெக்ஸ் (Global Hungar Index ) 2018ன்  அறிக்கைத்  தெரிவிக்கிறது.

இந்த  முறையானது,   உலகின்  அனைத்து நாடுகளிலும்  குழந்தைகளின் (5 வயதுக்குட்பட்ட) வயதுக்கேற்ப ஊட்டசத்தும் உணவும் கிடைக்கிறதா, இல்லாவிட்டால் அதனை எப்படி சரிசெய்வது, ஊட்டப் பற்றாக்குறையால் எத்தனை சதவீத குழந்தைகள் பாதிக்கப்பட்டள்ளனர்  என்று  வருடாவருடம்  கணக்கெடுக்கிறது.
 
இந்தப் பட்டியலில் நமது நாடு 103 வது இடத்தில் உள்ளது. மொத்தம் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 119 ஆகும்.
 
இந்த இன்டெக்சை கணக்கெடுக்க, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கிடைக்கும் உணவுக் கலோரிகள், உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமை, வயதிற்கேற்ற உயரம் இல்லாமை, குழந்தை இறப்பு விகிதம் போன்ற காரணிகள் கருத்தில் கொள்ளப் படுகிறன்றன. இதற்காக 2013-2017  வரையிலான  டேட்டா  பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
இதன்படி, சேட், ஹைத்தி, மடகாஸ்கர், சியோரா, லியோன், ஏமென், ஜாம்பியா போன்ற நாடுகள் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. இந்த அட்டவணையில் இடம் பெற்றுள்ள 119 நாடுகளில் 45 நாடுகள் மோசமான (Serious) நிலையில் உள்ளது. இந்தியாவும் இதில் அடங்கும்.
 
உள்நாட்டுப் போர், இனக்குழு கலவரங்கள், மக்களிடம் உணவு வாங்குவதற்கான வாங்கும் தன்மை இல்லாதது, இளம் குழந்தைகளுக்குப் போதுமான தாய்ப்பால் கிடைக்காதது. கர்ப்பிணி பெண்களுக்கும் பால் கொடுக்கும் தாய்மார்க்களுக்கும் போதிய ஊட்டம், உணவு கிடைக்காதது என பல காரணங்கள் இந்த ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு காரணமாகும்.
 
மேலே கூறப்பட்ட நான்கு காரணிகளில் மூன்றில் நமது நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு குறைந்துள்ளது. குழந்தை இறப்பு பெருமளவில் குறைந்துள்ளது. குழந்தை உயர வளர்ச்சியில் ஏற்றம் கண்டுள்ளோம், ஆனாலும் உயரத்திற்கேற்ற உடல் எடையில் நாம் இன்னும் போதுமான அளவிற்கு முன்னேறவில்லை. 2005 ஆம் ஆண்டில் 20% அக இருந்த இந்த காரணி 2018-ல் 21% ஆக உள்ளது. அதாவது  போதிய  முன்னேற்றம்  இதில்  இல்லை என்பதிலிருந்து போதுமான உணவும், ஊட்டமும்  இளம்  குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை என்பது தெரிய வருகிறது.
 
வலிவான பாரதம் வேண்டுமெனில் இளைய பாரதத்தை நாம் உடனடியாகக் கவனிக்க வேண்டும். அவர்களது  உணவிலும்  ஊட்டத்திலும்  கவனம் செலுத்த வேண்டியது  காலத்தின் கட்டாயம்.

Slider Image
11/17/2018 2:52:55 PM

விரட்டப்படும் தொழிலாளர்கள்

 கடந்த  சில நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் 14 வயது பெண் குழந்தையயான்று பீஹார் மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் குறிப்பாக பீஹார், உத்திரப்பிரதேசம், ஒரிசா, ஜார்க்கண்ட் போன்ற பகுதிகளைச்  சேர்ந்தவர்கள்  அச்சம் மற்றும் தாக்குதலுக்கு பயந்து வெளியேறி வருகின்றனர். 

தவறு செய்த ஒரு நபரை சட்டத்தின் மூலம் தண்டிப்பதே முறையானது. மாற்று மாநிலத்தைச் சார்ந்த ஒரு தொழிலாளி செய்த குற்றத்தை மனதில் வைத்துக் கொண்டு வெளிமாநிலத்தைச் சேர்ந்த அனைத்து உழைப்பாளர்களையும் தவறானக் கண்ணோட்டத்தில்  பார்ப்பது  எந்தவிதத்தில்  நியாயம்?
 
நமது நாட்டைப் பொறுத்தவரையில் எந்த ஒரு நபரும் எந்த ஒரு மாநிலத்திலும் தொழில் செய்யவோ, வேலை செய்யவோ தடையேதும் இல்லை. மேலும், குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு  போன்ற  முன்னேறிய மாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களில் வெளிமாநிலத்தைச் சார்ந்தவர்கள் பெருமளவில் உள்ளனர். அவர்களை நம்பித்தான் இந்த மாநிலங்களின் வளர்ச்சி அமைந்துள்ளது. எனவே, வெளிமாநிலத் தொழிலாளர்களை விரட்டியடிப்பதின் மூலம் சிலருக்கு அரசியில் இலாபம் கிடைத்தாலும் மாநிலத்தின் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இதனால் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. இது யானை தன் தலையில்  தானே  மண்ணை  அள்ளிப்போட்டு  கொள்வதைப்  போன்றதே  ஆகும்.
 
இதுமட்டுமின்றி, இந்த  தாக்குதலுக்குப் பின்னால் குஜராத்தைச் சேர்ந்தவர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும், அவரது வாய்ப்புகளை வெளி மாநிலத்தவர்கள்  தட்டிப் பறித்துக் கொள்கின்றனர் என்றும் ஒரு  கருத்து  விளங்குகிறது. அதற்காக, வெளி மாநிலத்தவர்களை விரட்டி அடிப்பது தீர்வாகாது. உடனடித் தேவை, வெளி மாநில தொழிலதாளர்களின் பாதுகாப்பு உறுதிச்செய்யப் படவேண்டும். அதே நேரத்தில் வேலை வாய்ப்பைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாநிலங்களும் உருவாக்க வேண்டும். இதனால் தொழிலாளர்கள் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்வதும் குறையும். அவர்கள் சொந்த இடத்தில் இருந்து கொண்டு வேலை செய்வதன் மூலம் ஊதியத்தின் பெரும்பகுதியை சேமிக்கவும், குடும்பத்துடன் சேர்ந்திருக்கவும் வழிவகை  ஏற்படும்.
 
இதுபோன்ற வெளிமாநிலத்தவர்களின் தாக்குதல் ஏற்கனவே, மஹாராஷ்ராவிலும் கர்நாடகாவிலும், தமிழர்கள் மீது தாக்குதல் மற்றும் பெங்களூரில் வடகிழக்கு மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் என, பல  இடங்களில்  நடைப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குறுகிய நோக்கத்திற்காக நடைபெறும் இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

Slider Image
11/8/2018 2:59:59 PM

கொலைப் பயணமாகும் சாலைப் பயணங்கள்!

 நமது நாடு உலகின் ஆறாவது பெரிய பொருளாதார வளர்ச்சிடைந்த நாடு. இந்தப் பொருளாதார வளர்ச்சியில் வேளாண்மை, தொழிற்சாலைகள், சேவைகள் என பல துறைகளும், தங்களது பங்களிப்பைக் கொடுத்துள்ளன. உற்பத்தி பொருள்களும் சேவைகளும்  நுகர்வோரை  சென்றடைய  சாலைகள்  பெரும்  பங்காற்றுகின்றன.

நாட்டின் வளர்ச்சிக்கேற்ப சாலைகளின் நீளமும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. பெருகி வரும் போக்குவரத்தினால் ஏற்படும் விபத்துகளும் உயிர்ப் பலிகளும்   ஏறுமுகமாக  உள்ளது. 2016-ஆம் ஆண்டில்  சுமார்  1,47,000  பேரும்   2017-ஆம் ஆண்டில் சுமார் 1,50,000 பேரும் சாலை விபத்தில் உயிர் இழந்துள்ளனர். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் மற்றும் உத்திரபிரதேசம் போன்ற பெரிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. கடந்த ஆண்டு விபத்தில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 4,70,000 ஆகும்.
 
உலக சுகாதார அமைப்பின் ஆய்வுப்படி இத்தகைய சாலை விபத்தில் உயிர்களை பலிகொல்வது மட்டுமின்றி அவர்களின் குடும்ப பொருளாதார நிலையையும் முற்றிலும் சீர்குலைத்து விடுகிறது. விபத்தில் உயிர் பிழைத்தாலும் வாழ்நாள் முழுதும் மருத்துவச் செலவுகள்  பல குடும்பங்களை  வறுமையில் தள்ளியுள்ளது.
 
விபத்துகளுக்கு ஓட்டுநரின் கவனக் குறைவு, வாகனங்களின் பழுது, சாலையின் வடிவமைப்பு குறைபாடு, மழை வெள்ளம் போன்ற காரணங்கள், விலங்குகள் மற்றும் பாதசாரிகள் சாலையின் நடுவில் செல்தல் போன்ற பல இருந்தாலும் ஓட்டுநரின் கவனக் குறைவுதான் விபத்திற்கு பெருங்காரணமாக அமைந்துள்ளது. அதிலும்  அதிவேகம்  மற்றும் குடித்துவிட்டு ஓட்டுதல், தவறானப் பாதையில் ஓட்டுதல் ஆகியவை இந்த விபத்துகளுக்கு அடிப்டைக் காரணங்களாகும்.
 
இத்தகைய விபத்துகளை தடுக்க வேண்டுமெனில் ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி மேம்படுத்தப் படவேண்டும். கண்மூடித் தனமாக உரிமங்களை வழங்க கூடாது. சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வும் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். அத்துடன் சாலை  விதிகளை  மீறுபவர்கள்  மீது  கடும்  நடவடிக்கை  எடுக்கப்பட  வேண்டும்.

Slider Image
10/22/2018 1:07:36 PM

150-வது பிறந்த நாள் காணும் காந்தி!

 காந்தி என்ற மாமனிதர் இறந்தாலும் காந்தியின் தத்துவங்கள் அவரது குணங்கள் மக்களின் மனதிலிருந்து மறைவது என்பது சாத்தியம் இல்லை. ஏன் என்றால் உண்மை என்றும் அழிவதில்லை! காந்தியின்  ஒவ்வொரு  நடவடிக்கையும் வாழ்வின் உண்மையைத்  தேடுவதாகவே  அமைந்தன  என்றால்  மிகையாகாது.

இவரது சத்தியத்துடன் சோதனைகள், பெரும்பாலானவை, தெற்கு ஆப்பிக்காவில் தான் நிகழ்த்தப்பட்டன. மனத் தூய்மை, உடல் தூய்மை, ஊர் தூய்மை, சத்தியாகிரகம், அகிம்சை  என  அனைத்து  விதமான பிரயோகங்களுக்கும்   தன்னையே ஓர்  ஆய்வுக்  கூடமாக  மாற்றிக்  கொண்டவர்  மகாத்மா!
தவறுகளும்  போராட்டங்களின் திசைகளும் மாறும்பொழுதும்  தனக்குத் தானே  தண்டனை  கொடுத்துக் கொண்ட நீதி மான் காந்தி!  மக்கள் தங்களது உணவு, உடை மற்றும்  இதர  தேவைகளைக் குறைத்து கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக  விளங்கியவர்  காந்தி.
புலால் மறுப்பு, மது மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்ற சமூகப் பிரச்சனைகளில் தன்னையே முன்னிருத்தி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்! தென்னாப்பிரிக்காவில் டால்ஸ்டாய் பண்ணையும், குஜராத்தில் சேவாகிரமும் நிறுவி தன் வாழ்க்கையை  ஒரு  திறந்தப் புத்தகமாக  நடத்திக்  காட்டிய  பெருமகனார்  காந்தி.
 
எதிரிகளிடமும் இரக்கம் காட்டியவர். பிரிட்டிஷ்  அரசாங்கத்தை  எதிர்த்த  போதிலும் சில நேரங்களில் அவர்களது இன்னலைப் போக்க ஒத்துழைப்புக் கொடுத்தவர். அவருக்கு நாட்டு  விடுதலையே  முழு முதல் கனவாக இருந்த போதிலும் அதனை அடைய அகிம்சையும் சத்தியாகிரகமும் மட்டுமே கருவிகளாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக விளங்கியவர். தனது வாழ்நாள் முழுவதும் மத நல்லிணக்கத்திற்காக போராடியவர் காந்தி. அந்த ஒரு காரணத்திற்காகவே தன் உயிரை இழந்த பெருமகனார்! நெல்சன் மண்டலோ, மார்ட்டின் லூதர் கிங் ஜீனியர் போன்ற பெருந்தலைவர்களுக்கு வழிக்காட்டியாக  விளங்கியவர்.
 
இந்த சமயத்தில் அவரது கொள்கைகளை நாம் பின்பற்றுவதே அவருக்கு நாம் செய்யும் கை மாறாகும். மக்கள் மனதில் நீ என்றும் வாழ்க என வாழ்த்துவோம் அந்த பெருமகனாரை!

Slider Image
10/8/2018 3:33:06 PM

சிறுமை கண்டு பொங்குவாய்!

 கடந்த சில வாரங்களில் மட்டும் நாட்டின் தலைநகரப் பகுதியில் ஆறு துப்புரவு தொழிலாளர்களும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஐந்து பேரும் கழிவு நீர் வடிகால்களை சுத்தம் செய்யும் பொழுது தங்களது உயிரை இழந்துள்ளனர். மற்றவர்களுக்கு இது ஒரு சாதாரண செய்தியாக  இருந்தாலும்  இறந்த  தொழிலாளர்களின் குடும்பங்களைப் பொறுத்த மட்டில் இது  ஒரு  பெரிய  அநீதி.

துப்புரவுத் தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் கூற்றுப்படி கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஏறக்குறைய 120 துப்புரவு பணியாளர்கள் தங்களது உயிரை கழிவுகளையும்  செப்டிக்  டேங்க்  சுத்தம் செய்யும் பொழுது இழந்துள்ளனர். சராசரியாக ஐந்து  நாட்களுக்கு  ஒரு  இறப்பு  ஏற்பட்டுள்ளது.
1993-ஆம் ஆண்டிலேயே மனிதர்களால் கழிவுகளை அகற்றும் (Manual Scavenging) முறை  தடை செய்யப்பட்டு விட்டாலும், இன்றைக்கும் நகர்ப்புறங்களில் கழிவு நீர் வாய்க்கால்களை சுத்தம் செய்ய இவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
 
இந்த தொழிலில் இருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருப்பதாலும், எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாலும், நமது சுயநலத்தாலும்  யாரும் இவர்களைப் பற்றி  கவலைக் கொள்வதில்லை என்பது நிஜம். இந்தியாவில் இவர்களது குடும்பங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 1.8 லட்சம் என்று சமூக-பொருளாதார-சாதி சென்சஸ் (2011) தெரிவிக்கிறது.
 
இத்தகைய இறப்புகளையும், மனிதர்களை சாக்கடைக் கால்வாயில் இறக்கி சுத்தம் செய்ய வைக்கும் இழிவுகளையும், தடுக்க வேண்டுமானால் துப்புரவு பணியாளர்க் குடும்பங்களுக்கு மாற்று வேலை வாய்ப்பு வழங்குவதோடு மட்டுமின்றி கழிவுநீர் வாய்க்கால்களையும், செப்டிக் டேங்க் சுத்தம் செய்தல் போன்ற பணிகளையும் எந்திர மயமாக்கல்  வேண்டியது  காலத்தின்  கட்டாயம். இல்லாவிட்டால் இந்த மனித அவமானத்தை தடுக்கவும் தவிர்க்கவும் முடியாது. இதற்கானச் சட்டத்தையும் கடுமையாக அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்த அவலங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

Slider Image
10/3/2018 4:28:54 PM

தற்கொலையைத் தடுப்போம் ! பெண்களை காப்போம் !

 பெண்ணின் பெருந் தக்க யாவுள! பெண்ணை விட பெருமை மிக்க வேறு என்ன இருக்கிறது, என்கின்றான் திருவள்ளுவன். ஆனால் பெண்களின் நிலை என்ன? சமீபத்தில் “லான்செட்” மருத்துவ இதழில் வெளியான தற்கொலைப் பற்றிய ஓர் ஆய்வறிக்கையின்  படி உலகின் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் 37% பெண்கள் இந்தியர்கள்.

2016 –ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகில் தற்கொலைச் செய்து கொண்ட 8,17,000 பேரில் 2,30,314 பேர் இந்தியர்கள். இந்த ஆய்வறிக்கை 1990 லிருந்து 2016 வரை  கிடைத்த  விவரங்களை  அடிப்படையாகக்  கொண்டு  உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் 1990 லிருந்து கிட்டதட்ட 40% (2016-ல்) அதிகரித்துள்ளது தற்கொலை விகிதம். தற்கொலை  செய்து  கொள்ளும்  உலக  ஆண்களில்  இந்திய ஆண்களின் பங்கு ஏறக்குறைய  24%  ஆகும்.
நம் நாட்டின்  பொருளாதார வளர்ச்சி உலகமயமாதல் காரணமாக வேகமாக வளர்ந்து  வந்த  போதிலும்,  வளர்ச்சியும் தற்கொலை வீதமும் ஏறுமுகமாகவே 1990 லிருந்து  உள்ளது. பெண்களைப் பொருத்த வரையில் 15-29 வயதுக்குட்பட்ட பெண்கள்தான் அதிகமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதுவும்  திருமணமானப் பெண்களின்  எண்ணிக்கை  அதில்  அதிகம்.
 
மாநிலங்களைப் பொருத்தமட்டில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம் இந்த தற்கொலைப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. குறைவான வளர்ச்சிக் கொண்ட வட மாநிலங்களில் தற்கொலை வீதம் குறைவாக உள்ளது. மாநிலங்களின்  வளர்ச்சிக்கும்  தற்கொலைக்கும்  இடையே உள்ள தொடர்பையும் ஆராய்ந்து  பார்க்கவேண்டியது  மிகவும்  முக்கியம்.
 
நமது   நாட்டை  பொருத்தமட்டில்  தற்கொலை வீதம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட போதிலும் முக்கிய காரணங்களாக நகரமயமாதலும் பாதிக்கப்பட்ட குடும்பச்சூழலும், கல்வியறிவு, வருமானம், நிதிப் பிரச்சினைகள், வீட்டு வன்கொடுமைகள், வரதட்சணை, மது, உளவியல் பிரச்சினைகள் மற்றும் இதர சமூக பொருளாதார காரணங்களும் விளங்குகின்றன.
 
இத்தகைய  தற்கொலை  பிரச்சினைகளை   உடனடியாக  தீர்க்க தகுந்த தற்கொலைத் தடுப்பு முயற்சிகளும், கொள்கைகளும் உருவாக்கப் படவேண்டும். முக்கியமாக  மக்களின் மன ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த தேச மன நலக்கொள்கை,2014  தக்க  முறையில்  அமல்  செய்யப்பட வேண்டும். இந்த பிரச்சினையை ஒரு  பேரிடராக  கருதாவிட்டால்  பொருளாதாரத்தில்  ஆறாவது  பெரிய நாடாக இருப்பினும் தற்கொலையில் முதலிடம் பெற்று அவமானப்படுவதை தவிர்க்க இயலாது. முக்கியமாக  பெண்களின்   வாழ்க்கையை  காப்பாற்ற வேண்டியது நமது கடமை. 
 
அப்பொழுதுதான், நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும்  கொண்ட மாதர்களை  நாம்  போற்ற முடியும்! தையல் வாழ்க பல்லாண்டு,பல்லாண்டு இங்கே என வாழ்த்த முடியும்.
 

Slider Image
9/26/2018 1:38:25 PM

நெஞ்சுப் பொறுக்கிதில்லையே!

  தற்போது எங்குப் பார்த்தாலும் எந்தச் செய்தித்தாளைப் பார்த்தாலும் ஒரு கொடுமையான வி­ச் செய்தியைக் காண்கின்றோம். அது குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் கோரம், அதுவும் குழந்தைகளுக்கான காப்பகத்தில் நடைபெற்று  வரும்  கொடுமை.

         பெண்களையும்  குழந்தைகளையும்  தெய்வமாக  வணங்கும் நமது நாட்டில் இன்று   ஒரு  கலாச்சார  பேரழிவாக  மாறி  வரும்  அக்கிரமங்கள்,
         நாட்டில் பீஹார்,உத்திரப்பிரதேசம்,பஞ்சாப்,தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களில் உள்ள  அரசு மற்றும்  அரசு சாராக் காப்பகங்களில் தான் இந்த அக்கிரமம் காலம் காலமாக நடத்துவருவது நமக்குத் தெரியவில்லை அல்லது தெரிந்தவர்கள் அதை வெளியேச்  சொல்லவில்லை. 
 
         இத்தகைய காப்பகங்களில் இருப்பவர்கள் பெரும்பாலும் எந்தவொரு ஆதரவும் இல்லாதவர்கள், அன்பு காட்ட யாரும் இல்லாதவர்கள், வாழ்வின் கோரப்பிடியில் சிக்கி ஏதாவதொரு தவறுக்காக காப்பகத்தில் வைக்கப்பட்டிருப்பவர்கள். ஆறுதலும் அரவணைப்பும் கிடைக்க வேண்டிய இடத்தில் இவர்களுக்கு கிடைத்தது வன்முறையும் வசவுகளும் மட்டுமல்ல சொல்லமுடியாத பாலியல் தொல்லைகளும்தான். மறுவாழ்விற்காக வந்தவர்கள் வாழ்க்கையை தொலைக்க வேண்டிய நிர்ப்பந்தம், கட்டாயம். 
 
           எடுப்பார்  கைப்பிள்ளை  என்ற  நிலை, இத்தகைய நிகழ்வுகள் வெளி உலகுக்கு வந்தது எப்படி? முதலில் பீஹாரில் சமூக அறிவியலுக்கான டாட்டா இன்ஸ்ட்டி யூட்டயால் நடத்தப்ட்ட ஆய்வு  தான் இதற்கெல்லாம்   மூல காரணம். அதைத் தொடர்ந்து பல மாநிலங்களும்   விழித்துக்   கொண்டன.  இதனால்  பல  கொடூரங்கள்  வெளிப்பட்டன. 
 
           பிரச்சினைகள்  உச்சத்தைத்  தொட்டவுடன்  உச்ச   நீதி மன்றம் தற்போது சாட்டையை  தன்கையில் எடுத்துள்ளது. குழந்தை  உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் உச்சநீதி மன்றத்தில் கொடுத்த  ரிப்போர்ட்டின்படி நாட்டில் உள்ள 2,874 குழந்தைகள் காப்பகத்தில் வெறும் 54 மட்டுமே திருப்திகரமாக உள்ளது. இதிலிருந்து கொடூரத்தின் வேர் எவ்வளவு ஆழமானது என்பது புரியும். இந்த கொடுமைகள் தொடரக் காரணம் காப்பங்களில் தொடர் ஆய்வு இல்லாததும் சிறு பிரச்சனைகளை முளையிலேயே   தடுக்காமல்   விட்டதும்தான். 
 
           பெரும்பாலான காப்பகங்கள் அரசு உதவி பெற்ற போதிலும் அவை அரசு சாரா அமைப்புகளால்  நடத்தப்பட்டு வருகின்றன. அந்த அமைப்புகளின்  பின்னணியில்  உள்ள  பலம் பொருத்தியவர்களால்தான் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாமல இருந்திருக்கலாம். பெண்கள் நகையணிந்து கொண்டு எப்பொழுது இரவில் சுதந்திரமாக நடமாடுகிறார்களோ அப்போதுதான் இந்தியவிற்கு  விடுதலை என்றார் காந்தி. ஆனால்  தற்போது   நிலைமையோ   தலைகீழாக  உள்ளது. 
 
           உடனடியாக அனைத்து தரப்பினரும் இந்தக் கொடுமையிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை காக்க வேண்டும். மேலும் எதிர்காலத்தில் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் விடுதலையில்லா விட்டாலும் பெண் கொடுமைகள் களையப்பட வேண்டும். பெண்கள் பாதுகாக்கப் படவேண்டும். அதுதான் உண்மையான  சுதந்திரம்.  அப்பொழுதுதான்  “நம்மை  பிடித்த பிசாசுகள் போயின”  என்ற   மீசைக்  கவிஞனின் கூற்று  நனவாகும்.
 

Slider Image
9/26/2018 1:18:45 PM

கும்பல் கொலையும் குடிமக்களும்!

 நமது நாட்டில் மக்கள் தொகையின் எண்ணிக்கைப்  போலவே சமுதாயப் பிரச்சினைகளும் அதிகம் பன்முகத் தன்மையில் ஒற்றுமை என்பது ஒரு கனவாகிவிடுமோ எனத் தோன்றுகிறது. நாட்டில் ஒரு பக்கம் மழை, வெள்ளம், வறட்சி, வேலை  வாய்ப்பின்மை  போன்ற  பல்வேறு இயற்கை மற்றும் சமூக இடர்பாடுகள்.   நடு நடுவே ரூபாயின் மதிப்புச் சரிவு, இறக்குமதி அதிகரிப்பு, விலைவாசி உயர்வு போன்ற பொருளாதார பிரச்சினைகள் மறுப்பக்கம். இவற்றிற்கு இடையே சமீபகாலமாக ஒரு பெரிய பிரச்சினை, கும்பல் கொலை(Mob Lynching).

கடந்த சில மாதங்களாக நமது நாட்டில், பல மாநிலங்களில் குறிப்பாக அசாம், இராஜஸ்தான், உத்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகியவற்றில் திடீர் திடீரென பல இடங்களில் மனிதர்கள் மீது பல்வேறு காரணங்களுக்காக கொலைத் தாக்குதல் நடைப் பெற்று வருகிறது. பசுக்களை கடத்துதல், குழந்தைகளை கடத்துபவர்கள், கருத்துகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என பல்தரப்பட்ட காரணங்கள் இதற்கு கூறப்படுகின்றன. இந்தத் தாக்குதலில் பெரும்பான்மையானவர்கள்  உயிர்  இழந்துவிட்டனர்.
 
 
இந்த நிகழ்ச்சிகளைக்  கண்டும்  காணாமல்   நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் தற்போது உச்ச நீதி மன்றம் கும்பல் கொலையைக் கட்டுப்படுத்த, குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க  புதிய சிறப்பு சட்டத்தை உருவாக்குமாறு மத்திய அரசைக் கேட்டுள்ளது. நம்மை  பொறுத்த வரையில் நாட்டில் இது தற்போதைய நிகழ்வாக  இருப்பினும்  கும்பல் கொலை  நிகழ்வுகள், அடிமைத்தனம் ஒழிவதற்கு முன்பு அமெரிக்காவிலும் இருந்திருக்கிறது. பல்வேறு ஐ.நா அறிக்கைகள் மூலம் சூடான், நைஜீரியா, ஹைத்தி  போன்ற  நாடுகளிலும்  இந்த  வன்கொடுமைகள் காணப்படுகின்றன.
 
 
ஆழமாகப் பார்த்தால் இந்த தாக்குதல் நடத்தப்படும் பொழுது பொதுமக்களோ, காவல் துறையோ உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைச் செய்திகள் தெரிவிக்கின்றன. சமூகக் கட்டுபாடுகள்  இந்த  பாதகச் செயல்களைத் தடுக்க தவறிவிட்டது. இந்த நிகழ்வுகள் நாட்டின் சட்டத்தைக் கேள்வி குறியாக்கி உள்ளது. நீதியின் மூலம் தண்டனை வழங்கும் முறையை இவை சிதைக்க கூடும். எதிர்காலம் ஒரு காட்டுமிரான்டித் தனமான போக்கினால் பெரும் பாதிப்படையக்கூடும். கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என ஒவ்வொருவரும் சட்டத்தையும் நீதியையும் தன் கையில் எடுத்தால் நாம் பெற்ற சுதந்திரத்திற்கு எந்தவித அர்த்தமும் இல்லை. நடவடிக்கை  எடுக்க வேண்டியவர்கள்  உடனடியாகத்   தலையிடுவது  நாட்டிற்கு  நல்லது.
 
 
நல்லதோர் வீனை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
 
 

Slider Image
9/26/2018 12:28:35 PM

ஏட்டுச் சுரைக்காய் !

 உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடு இந்தியா. மக்கள் தொகையில் இரண்டாவது இடம். பால், பழம், காய்கறிகள் தானியங்கள் உற்பத்தியில் முன்னனி. அதே போன்று எதற்கும் உதவாத வாழ்வின் பயன்பாட்டிற்கு உபயோகமில்லாத கல்வி அளிக்கும்  நிறுவனங்களின் குறிப்பாக தொழில் நுட்பக் கல்லூரிகளின் பெரும் சந்தையாக  உள்ளது.

இந்த கல்வி நிறுவனங்களில் பெரும்பான்மையானவை  பணத்தைக் கொள்ளையடிக்கும் அமைப்புகளாகவும் பட்டங்களை வழங்கும் தொழிற்சாலைகளாகவும்   இயங்குகின்றன  என்றால்  மிகையாகது. 
 
நமது நாட்டில் ஏறக்குறைய 10,000 தொழில் நுட்பக் கல்லூரிகள் உள்ளன. இவற்றின் மாணவர் இருக்கை 40 இலட்சம் என்ற போதிலும் 2017-2018 ஆம் ஆண்டில்  கிட்டத்தட்ட  27  இலட்சம்   இருக்கைகள்   நிரம்பாமல்  காலியாகவே இருந்தன.
பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் போதிய  உள் கட்டமைப்பு வசதிகளும் கற்பிக்கும்  ஆசிரியர்களும்  இல்லாததால்  மாணவர்கள்  அவற்றில்  சேர போதிய ஆர்வம் காட்டவில்லை. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (AICTE) சுமார் 800 பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு  நடவடிக்கை  எடுத்துள்ளது. இதற்கு  முக்கிய  காரணங்களில் ஒன்று கடந்த 5 ஆண்டுகளில் 30 சதவீதத்திற்கும் குறைவான சேர்ப்பு என்பதே. அந்தக் கல்லூரிகள் வேண்டுமானால் மற்ற நல்ல கல்லூரிகளுடன் இணைக்கப்படலாம் அல்லது அவற்றின் மாணவர்  இருக்கை 50 சதவீதமாக குறைக்கப்படவும் கூடும் அல்லது முழுமையாக  மூட  நடவடிக்கை  எடுக்கப்படும்.
 
2016-2017 ஆம் ஆண்டில் மொத்தம் உள்ள 15.71 இலட்சம் பொறியியல் சீட்டுகளில் 7.87 இலட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் ஏறக்குறைய ஒரு இலட்சம் இடங்கள் காலியாக உள்ளன. 2014-2017-ல்  மட்டும்  ஏறக்குறைய 400 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
 
இதிலிருந்து  என்னத்  தெரிகிறது? பொறியியல் கல்லூரிகளில் உள்ள வசதிகளும், ஆசிரியர்களும் காலத்திற்கேற்ற வேலை வாய்ப்பை உறுதிச் செய்யவில்லை. பொறியியல் படித்த மாணவர்களில் 50% வேலையில்லாமல் உள்ளனர். தொழிற்சாலைகளின் கூற்றுப்படி பொறியியற் பட்டதாரிகளில் வெறும் 6% மட்டுமே வேலைக்கேற்ற தகுதிகளைப் பெற்றுள்ளனர். அதாவது 94% மாணவர்கள் படிக்கும் காலத்தில் தொழில் நிறுவனங்களுக்கேற்ற நுட்பத்தை பெறவில்லை என்பதே  உண்மை.
 
எனவே பொறியியற் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, தகுதி வாய்ந்த   ஆசிரியர்களை அமர்த்துதல், பல்வேறு படிப்புகளின் சிலபஸ்  முறையை தொழில் நிறுவனங்களுக்கு   உகந்தவாறு மாற்றியமைத்தல், கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலை  உறவுகளை  மேம்படுத்தல் புதிய படிப்புகளை குறிப்பாக ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு  (Artificial Intelligence) சைபர்  செக்யூரிட்டி, க்ளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அனலிடிக்ஸ் போன்றவற்றை  அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றை உடனடியாகச் செய்யவேண்டும். அப்பொழுதுதான் படித்த பொறியியற் பட்டதாரிகளுக்கு உரிய வேலை வாய்ப்பு கிடைக்கும். அதுமட்டுமின்றி, கண்ணை மூடிக் கொண்டு   பொறியியற்  கல்லூரிகளை   திறக்க  அனுமதிக்கவும்  கூடாது.
 
 
இல்லாவிட்டால், படித்த  வல்லுனர்கள்  நொந்து   நூலாவதைத்  தவிர்க்க  முடியாது!
 
 

Slider Image
9/26/2018 11:56:34 AM

ஆசிய விளையாட்டு போட்டியும் இந்தியாவும் !

 தற்போது முடிவடைந்த  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா, மொத்தம் 69 பதக்கங்களுடன் 8- து இடத்தைப் பிடித்துள்ளது,நாம் பெருமையடைய வேண்டிய வி­யம். இதில் 17 தங்கம், 24 வெள்ளி மற்றும் 30 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.

இந்தோனேஷியாவில் கோலகலமாக நடந்த இந்த விளையாட்டுத் திருவிழாவில் வழக்கம் போல சீனா, 289 பதக்கங்கள் பெற்று முதலிடத்திலும், ஜப்பான்  நாடு 205 பதக்கங்களுடன் இரண்டாமிடத்திலும் தங்களது வெற்றியை நிலைநாட்டியுள்ளது. நமது நாட்டைக் காட்டிலும் சிறிய மற்றும் குறைந்த மக்கள் தொகையுடைய கொரியா,  இந்தோனேசியா, உஸ்பெக்கிஸ்தான் போன்ற  நாடுகள் அதிகப்  பதக்கங்களை  கொள்முதல்  செய்துள்ளதை   ஆய்ந்துப்  பார்க்க  வேண்டும்.
நமது நாடு 2010 ஆம் ஆண்டு சீனாவில் நடைப்பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில்   பெற்ற  பதக்கங்களை  விட அதிகமானவற்றை தற்போது பெற்றிருந்தாலும் நமது நாட்டின் பரப்பளவு, மக்கள் தொகை, வாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி  ஆகியவற்றுடன்  ஒப்பிடும்  பொழுது  இந்தப்  பதக்கங்களின்  எண்ணிக்கை குறைவேயாகும். குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்னவெனில், தொடர்ச்சியாக  நமது நாட்டின்  பதக்க  எண்ணிக்கை  உயர்ந்து  வருவதேயாகும். 
             இந்த ஆண்டு விளையாட்டில் பங்குப்பெற்ற வீரர்களில் 60% க்கும் மேலானவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாகும். தற்போது பல்வேறு மாநிலங்களும் வெற்றி பெறும் வீரர்களுக்கு பணத்தையும் பரிசையும் அள்ளி   வழங்கி  வருவதால்   இளைஞர்களிடையே  ஆர்வம்   பெருக  ஒரு  காரணம் எனலாம். முக்கியமாக தடகளப்போட்டிகளிலும். (Track and Field events) வில், பாட்மிட்டன், குத்துச்சண்டை, மல்யுத்தம், எடைத் தூக்குதல் போன்றவற்றிலும் வெற்றி வாய்ப்பு  அதிகமாக   கிடைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைப்பெற்ற காமன்வெல்த் போட்டிகளிலும்  66 பதக்கங்கள் பெற்று இந்தியா சிறப்பான இடத்தை தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது.
மேற்கண்ட நிகழ்வுகளை காணும் போது 2020-ல் ஜப்பானில் நடக்கவிருக்கும்  ஒலிம்பக்  போட்டியிலும்  நமது வாய்ப்புகள்  பிரகாசமாக  உள்ளது.
எனவே  வீரர்களின் தேர்வுகளிலும் அவர்களின் பயிற்சி மற்றும் வசதிகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் தற்போது நடைப்பெற்ற போட்டிகளில் வெற்றிப்  பெற்ற  பெரும்பாலான  வீரர்கள்  சாதாரண  நிலையிலுள்ள குடும்பங்களிலிருந்தும், கிராமப்புறங்களிலிருந்தும்  வந்துள்ளனர்  என்பது  குறிப்பிடத்தக்கது.
கிராமங்கள் தான் இந்தியாவின் கெளரவம் என்பதை ஆசிய விளையாட்டுப் போட்டிகள்  நிரூப்பித்துள்ளன.
 

Slider Image
9/14/2018 5:00:50 PM

வரும் முன் காப்போம்!

             இந்த ஆண்டில் இந்தியாவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோதனை கேரளாவில் வந்த வெள்ளப் பெருக்கு. 1924 ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளா இந்த பேரழிவைச் சந்தித்திருக்கிறது. இதற்கு  முக்கியமான காரணங்களில் ஒன்று  வரலாறு காணாத மழை. ஆகஸ்ட்  மாதத்தில்  ஒன்று  முதல்  இருபதாம் தேதி வரையில் மட்டுமே  கிட்டத்தட்ட 77 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த மாதத்தில் ஏற்பட்ட மழையளவு வழக்கமான மழையளவைக் காட்டிலும் மூன்று மடங்காகும். இதனை எதிர்பார்காத காரணத்தினால் ஏற்பட்ட அழிவு சுமார் இருபதாயிரம் கோடிக்கும் மேல் என்று வல்லுனர்கள் மதிப்பீட்டுள்ளனர். இதில்  தனிப்பட்ட மற்றும் பொதுச் சொத்துக்கள் அடக்கம். உயிர்  இழப்புகள்  தனி. 

           இத்தனை  அழிவுக்கு காரணமான அடிப்படைக் காரணிகளில் முக்கியமானது, அதிகரித்து  வரும்  வெப்பநிலையும்  அதனைச்  சார்ந்த  காலநிலை மாற்றமும். உலக  அளவில்  இந்த காலநிலை மாற்றத்தினால் மழை, வெள்ளம், கடல்மட்டம் உயர்வு, நிலப்பகுதிகள் மூழ்குவதோடு மட்டுமின்றி  சமீபகாலமாக  காட்டுத் தீயும் ஏற்பட ஆரம்பித்துள்ளது. 
 
           தெற்கு ஆசியாவை பொறுத்தமட்டில் தென்னிந்தியா ஒரு ஹாட் ஸ்பாட்டாக உள்ளது. இந்த  நூற்றாண்டில்  இறுதிக்குள்  நமது  நாட்டின்  வெப்ப நிலை 1.5 செ  - 3 செ  அதிகரிக்க  வாய்ப்புள்ளதாக  ஆராட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கேரளாவில் பெய்த கன மழையை  போல் வருங்காலத்தில் மத்திய மற்றும் தெற்கு                     இந்தியாவில் கனமழை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கேரளாவை பொறுத்தவரையில் மழை மட்டுமின்றி, போதிய முன்னேற்பாடின்மை, காடுகள் அழிப்பு, ஒழுங்குப்படுத்தப் படாத நகர வளர்ச்சி, சுரங்கப் பணிகள் என பல காரணங்களால் இன்று  அதிகப்படியான  அழிவு  ஏற்பட்டுள்ளது எனக் கூறலாம். வளர்ச்சி, மேம்பாடு என்ற  பெயரால்  மேற்குத் தொடர்ச்சி மலையின் வளங்கள் சூறையாடப் பட்டதால்தான் இந்த  அழிவு  என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் மாதவ் காட்கில் கூறியுள்ளார். 
 
             இவர், மேற்குத்  தொடர்ச்சி மலை சம்பந்தமான சுற்றுச்சூழல் கமிட்டியின் தலைவராவார். இந்தக் கமிட்டி சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே கோவாவிலிருந்து கேரளா வரையுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை பாதுகாப்பது தொடர்பான தனது அறிக்கையை அரசுக்கு சம்ர்ப்பித்துள்ளது. அவற்றை அமல் படுத்தியிருந்தால் தற்போது ஏற்பட்டடுள்ள சேதத்தில் 50% வரை குறைந்திருக்கலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர் காட்கில் கூறியுள்ளார்.  கேரள அழிவுகளையும், காரணங்களையும்  ஆராய்ந்து வரும் பல்வேறு ஆராட்சியாளர்கள்  இது  ஆரம்பமே என்றும்  இதுபோல்  மேலும் பல நிகழ்வுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றும் கூறுகின்றனர்.
 
             நாம் கண் கெட்ட பின் சூரிய  நமஸ்காரம்  செய்வதைவிட “வருமுன் காப்பதே மேல்” என்று உணர்ந்தால் பேரழிவுகளை  தவிர்க்கலாம். அதனால் ஏற்படும்  இழப்புகளை குறைக்கலாம் !
 

Slider Image
9/5/2018 5:16:52 PM

காக்க,காக்க, தண்ணீர் காக்க !

 நீர் இன்றி அமையாது உலகு என்றுரைத்தார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்!  இது நிதர்சன  உண்மை. இன்றையக் காலக் கட்டத்தில் ஒரு பக்கம் வெள்ளத்தினால் குடிப்பதற்கு கூட  நீர்  கிடைப்பத்தில்லை. மறுபக்கம்  வறட்சிக் காரணமாக  சொட்டு நீருக்கு மக்கள் அலைய வேண்டிய நிர்பந்தம். காரணம், நீர்வள மேலாண்மை இல்லாதது தான். தற்போது இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் குறிப்பாக கேரளா கர்நாடகா, ஆந்திரா,தமிழ்நாடு போன்றவை வெள்ளத்திளால் பாதிக்கபட்டுள்ளன.

அதே சமயத்தில் நாட்டின் பல பகுதிகளில் போதுமான மழையில்லை. இந்தியப் பொருளாதாரம் வேளாண்மைச் சார்ந்தது. நாட்டில் 70% மக்களின் வாழ்வாதாரம் விவசாயம்.  ஆனால்  ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின் சூதாட்டமாகவே விவசாயம்  நடைபெற்று  வருகிறது. மழைக்காலத்தில்  கிடைக்கும்  உபரி  நீரைச்  சேர்த்து  வைக்க  சரியான  திட்டமிடல் இல்லாதக் காரணத்தினால் பெருமளவு நீர் வீணாக கடலில் கலக்கின்ற சூழ்நிலை. உபரி நீர் சேகரம் குறைவதானால் ஏரிகளில் குளங்களில் போதுமான நீர் இருப்பு இல்லை. மழை மிகக்குறுகிய காலத்தில் பெய்து முடிந்து விடுவதால் அதனைச் சரியாக உபயோக படுத்த முடிவதில்லை. எனவே உபரி மழைநீரை சேகரிக்கவும் குளம், ஏரி, நீர்த் தேக்கங்களின் கொள்ளளவு உயர்த்தப்பட வேண்டியது  மிகவும் அவசியம். இதனால்  நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு குறைவான மழைக்காலத்தில் உபயோகத்துக்கு  தேவையான நீரும்  கிடைக்க வாய்ப்புள்ளது.
இது மட்டுமின்றி இந்தியாவின் ஆறுகள் உடனடியாக இணைக்கப்பட வேண்டும். குறைந்த  பட்சம்  தமிழக  ஆறுகளாவது  இணைக்கப்பட்டால்  ஒவ்வொரு ஆண்டும் எழும் தண்ணீர் பிரச்சினையைக் குறைக்கலாம். மாநிலங்களுக்கிடைய எழும் காழ்ப்புணர்ச்சி, வன்முறை போன்றவற்றையும் தவிர்க்க முடியும். தற்போது கூட கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவின் அனைத்து அணைகளும்  நிரம்பினாலும் தண்ணீர் பிரச்சனை  மீண்டும்  தலைதூக்கும் சூழ்நிலை ஏற்படக் கூடும். எனவே கிடைக்கும் மழை நீரை எப்படி சேகரிக்க வேண்டும்? நிலத்தடி நீரை உயர்ந்த என்ன செய்ய வேண்டும்?  தமிழக ஆறுகளை இணைக்க என்ன நடவமிக்கை தேவை என்பது குறித்த  நீண்டகால  மற்றும்  குறுகிய  கால  திட்டமிடல்  மிகவும்  அவசியம்!
 
“வங்கத்தில்  ஒடிவரும்  நீரின்  மிகையால்  மையத்து   நாடுகளில்  பயிர் செய்குவோம்”
என்ற  பாரதியின்  கனவு  எப்பொழுது  நனவாகும்!
 

Slider Image
8/29/2018 6:21:39 PM

இளைஞர் சக்தி

 தற்போயை இளைஞர்களைப் பற்றி வயது மூத்தவர்களிடமோ, நடுத்தர வயதுடையவர்களிடயே கேள்வி கேட்டும் பாருங்கள் உடனே பதில் வேகமாகவில்லேற்றப்பட்ட அம்பு மாதிரி வரும், எதற்கும்லாயக்கற்றவன், உதவாக்கரை ஊர்ச்சுற்றி, செல்பேசியும் கையுமாக அலைகின்றவன் என்று.ஒரு நிமிடம், நீங்கள் நினைத்தம் பார்க்கவும், இந்த இளைஞர்களுக்காக,திட்டுவதைத் தவிர வேறு எதாவது நீங்கள் செய்திருக்கிறீர்களா? நிச்சயமாக பதில் இல்லை என்றே வரும்.இந்தியாவின் மக்கட் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இளைஞர்கள் உள்ளனர்.உலகின் இளமையான நாடுகளில் முன்னணி வகிக்கிறது நமது நாடு. இந்த உலகத்திற்கே தேவையான உழப்பை நமது இளைஞர்களால் வழங்க முடியும்.

அதனால் தான் சுவாமி விவேகானந்தரும் இளைஞர்களே எதிர்காலம் என்றார்.அத்தகைய, எதிர்காலத்தின் தூண்களை போற்றி புகழாத நாடு எந்த விதத்திலும் முன்னேற முடியாது, எதிர்காலத்தின் கண்களாகத் திகழும் இளைஞர்களுக்காக நாம் செய்ய வேண்டியது ஒன்று,அது வாய்ப்புகள் மேலும் அந்த வாய்ப்புகளை தனதாக்கிக்கொள்வதற்கான திறமைகள்,அந்த திறைமகள் உருவாக்கத்தக்க கல்விமுறை இதைக் கொடுத்தால் இன்றைய இளைஞர்கள் இமயத்தில் என்ன சூரியனினில்கால் பதிக்கதயங்க மாட்டர்கள். தற்போதைய செய்தித்தாள்களில் பார்த்தால் இளைஞர்கள் ஒரு குழுவாகவோ,நற்பணி மன்றம் மூலமாகவோ அல்லது தமது நிறுவனங்கள் மூலமாகவோ ஏதாவது ஒரு சமூக சேவையை மேற்கொண்டு வருகின்றனர்.
 
அவர்கள் பல ஊர்களில் நீர்வள ஆதாரங்களை மறுச் சீரமைப்பு செய்து வருகின்றனர்.பல இடங்களில் பள்ளிகள்,கோயில்களை சுத்தம் செய்வது, மரங்கள் நடுதல், சுகாதாரம் பணிகள் மேற்கொள்வது என தமது நேரத்தை உபயோகமாக செலவழித்து வருகின்றனர்.ஆனால் இவை அனைத்தும் எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லாமல் நடந்துவருகிறது. நமது நாட்டை வலிவான, வளமான நாடாக மாற்ற வேண்டுமானால் இந்த இளைஞர் சக்தியை ஒழுங்குப் படுத்தி ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் இளைஞர் சக்தி விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.இளைஞர் சக்தி ஒரு காட்டாற்று வெள்ளம் அதை நல்வழியில் ஒழுங்குப் படுத்தி நாட்டைப் புனரமைக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டும்  அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது நமது கடமை.