loader
நிரப்புகிறது.....
Slider Image
8/8/2019 12:58:40 PM

 உருகும் ஆர்க்டிக் பனிப் பாறைகள்!


      20 ஆம் நூற்றாண்டில்   புவியின்   வெப்பநிலை   உயர்வு இன்று ஒரு அபாயகரமான  முடிவை   நோக்கி நகர்ந்து வருகிறது. உயர்ந்து வரும் புவி வெப்பநிலையால்   ஏற்படும்  காலநிலை   மாற்றங்கள்  பல உயிரினங்கள் அழிவதற்கு இன்று  காரணமாகி  வருகிறது. ப•மை  வீடு விளைவு   என்பது  தற்போது  ஆர்க்டிக்கின் பனிப் பாறைகள்   அழிவிற்கு    காரணமாகி உள்ளதாக விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்து  கூறியுள்ளனர்.
    1990களில்  இருந்ததைவிட   மூன்றில் ஒருபங்கு தான் பனிப்பாறைகளின் தடிமன் உள்ளதாக அறிவியல் அறிஞர்கள் அறிவித்துள்ளனர். மேலும் பனிப்பாறைகளின் அடிப்பகுதிகள் உருகுவதால் கடல் உயிரினங்கள் மீது ஏற்படும் விளைவுகளையும் ஆராய்ந்து   வருவதாக   நார்த்  கரோலினா வில்மிங்க்டன் பல்கலைக்  கழகத்தைச்   சார்ந்த டில் வேக்னர்   எனும்  விஞ்ஞானி  அறிவித்துள்ளார்.
   ப•மை குடில் வாயுக்களால் உருகப்போவது ஆர்க்டிக்கின் பனிப்பாறை மட்டுமல்ல நமது   வாழ்க்கையும்தான்!


      இதனை  உணர்ந்து  திருந்த  வேண்டியது  நமது  கடமை!

Slider Image
8/8/2019 12:43:21 PM

 

còzD gì½ ÃM© ÃVçÅï^!

          20‡gD ±uÅVõ½_   Asl[   Øk©ÃWçé   cBì¡ Ö[® Îò ¶ÃVBï«\Vª  x½çk   ¼åVÂþ åïìÍm kòþÅm. cBìÍm kòD As Øk©ÃWçéBV_   °uÃ|D  ïVéWçé   \Vuźï^  Ãé clöªºï^ ¶ak>uz Ö[®  ïV«ð\Vþ  kòþÅm. ÷ç\  T| sçá¡   ¨[Ãm  >u¼ÃVm  gì½Âþ[ ÃM© ÃVçÅï^   ¶asuz    ïV«ð\Vþ c^á>Vï sÞQVMï^ >u¼ÃVm ïõ¦¤Ím  í¤¥^áªì.

            1990ï¹_  ÖòÍ>ç>s¦   J[¤_ Îòúz >V[ ÃM©ÃVçÅï¹[ >½\[ c^á>Vï ¶¤sB_ ¶¤Qìï^ ¶¤sÝm^áªì. ¼\KD ÃM©ÃVçÅï¹[ ¶½©Ãz]ï^ còzk>V_ ï¦_ clöªºï^ *m °uÃ|D sçá¡ïçá¥D g«VFÍm   kòk>Vï   åVìÝ  ï¼«VoªV s_tºÂ¦[ Ã_ïçé  ïwïÝç>ß   ÄVìÍ> ½_ ¼kÂªì   ¨ÐD  sÞQVM  ¶¤sÝm^áVì.

            ÷ç\ z½_ kV¥ÂïáV_ cò塚ÃVkm gì½Âþ[ ÃM©ÃVçÅ \â|\_é å\m   kVµÂçï¥D>V[!

            Ö>çª  cðìÍm  ]òÍ>  ¼kõ½Bm  å\m  ï¦ç\!

Slider Image
7/4/2019 12:54:47 PM

குடிநீருக்காக !

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரம் குடிநீர் இன்றி பரிதவித்துள்ள நிலையைப் பற்றி கடந்த ஆண்டு அனைவரும் படித்திருப்பீர்கள். அந்த நிலை தமக்கு இவ்வளவு குறுகிய காலத்தில் நேரும் என தொழில் நுட்ப நகரமான சென்னை எதிர்ப்பார்த்திருக்காது. இந்த ஆண்டு கோடைக்காலம் ஒவ்வொரு வீட்டிலும் குடிநீருக்காக காத்திருப்பதைப் பார்த்தால் வருண பகவானும் கண்ணீர் வடிப்பான்! பல இடங்களில் தண்ணீர் இல்லாததால் உணவகங்கள், பள்ளிகள், ஐ.டி. நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய நிலை. இதற்கெல்லாம் காரணம் யார், வேறு யார் மனிதர்களாகிய நாம் தான். இயற்கை வளங்களை குறிப்பாக நீரை சேமிக்காமல் கண் மூடித்தனமான உபயோகம் தான் மூலக்காரணம். கடந்த 6-7 மாதங்களாக தமிழகத்தில் மழை இல்லை; ஏரிகளும் குளம், குட்டைகளும் வறண்டு நாளாகிறது. குடி நீர்த்தேக்கங்களில் 1 சதவீதத்துக்கு குறைவான நீர் . சென்னை நகரின் சாதாரணமாக தினசரி நீர் தேவை •மார் 1300 மில்லியன் லிட்டர் இதில் பாதியளவு கூட தற்போது வழங்கப்பட வில்லை. சென்னையைச் •ற்றி அமைந்துள்ள ஏரிகளின் மாவட்டமான காஞ்சிபுரம் இம்முறை கைக்கொடுக்கவில்லை . மழை இல்லாதது, பெய்த மழை நீரை சேமிக்காதது, ஆறுகளின் மணலை அதிகப்படியாக எடுப்பது, நீலத்தடி நீரை அதிகமாக எடுப்பது, நீர் ஆதாரங்களான ஏரிகள் தூர்வாரப்படாதது, செலவு செய்யும் நீரை மறு •ழற்சி செய்யாதது என பல்வேறு பிரச்சனைகளும் ஒன்று கூடி இன்றைய மனிதனை ஆட்டி வைக்கிறது. இதற்கனைத்தும் காரணம் மனிதனே! நீரின்றி அமையாது உலகு ! என்ற வள்ளுனின் வாக்கு இன்று உண்மையாகியுள்ளது. மனிதர்கள் திருந்த வேண்டும்.

Slider Image
5/18/2019 11:22:06 AM

கல்வியைப் பாதிக்கும் கால நிலை மாற்றம்!

 ஏழ்மையையும் வறுமையையும் விரட்டுவதில் கல்வியின் பங்கு முக்கியமானது. அனைத்து நாடுகளுமே தங்களது குழந்தைகளை குறைந்த பட்ச கல்வியை நோக்கி முன்னேற்ற பாதையில் செல்கிறது. இந்த முயற்சியிலும் பருவ கால மாற்றங்கள் பாதிப்பை ஏற்படுத்தும்  என  மேரிலாண்ட்  பல்கலை  கழகம்  நடத்திய  ஆய்வு தெரிவிக்கிறது.

கடுமையான வெப்பமும் அதிக மழையும் கொண்ட வெப்ப நாடுகளில், இந்த பாதிப்பு அதிகமாக வாய்ப்புள்ளதாகவும், மிகவும் வசதியான குழந்தைகள் கூட இதனால் பாதிப்படையக் கூடும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக தென்கிழக்கு ஆசியா நாடுகளில்  உள்ள  குழந்தைகள் இந்த  காலநிலையை சந்திக்கும் போது  அவர்களின் பள்ளி நாட்களின் எண்ணிக்கை குறைந்து கற்றல் திறனும் பொதுவான பள்ளிகல்வியும் பாதிப்படையக்  கூடும்  என்கிறது  ஆய்வு.
மேலும் இத்தகையை காலநிலை மாற்றங்களை கணக்கில் கொண்டு குழந்தைகளின் கல்வி தொடர்பான கொள்கை முடிவுகள் மாற்றப்பட வேண்டும் என்கிறது இந்த ஆய்வு.
 

Slider Image
4/15/2019 6:59:33 PM

பூச்சிகள் இல்லாவிட்டால் உலகம் இருக்காது!

 பயலாஜிகல் கன்சர்வே­ன் எனும் பத்திரிக்கையின் கட்டுரைப்படி அடுத்த சில பத்தாண்டுகளில்   உலகில் வாழும் பூச்சி இனங்களில் 40% அழிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் இதற்கு முதன்மையானக்  காரணமாகும். இந்த  அழிவு வருடத்திற்கு 2.5% ஆக உள்ளது. சிட்னி மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் விவசாய அறிவியலுக்கான சீன அகாதமியுடன் இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது.உலகின் விலங்குத் தொகுப்பில்  70%   பூச்சியினங்களாகும்.  இவை  உணவு   சங்கிலியில் பெரும்பங்கு வசிக்கிறது.

வாழிடங்கள் அழிப்பு, உரங்கள், பூச்சி கொல்லிகள், நகர் மயமகுதல் மற்றும் இதர உயிரியல்  காரணங்களால்  பூச்சியினம்  அழிந்துக்  கொண்டிருக்கிறது  எனக்  கூறுகிறது    இந்த  ஆய்வறிக்கை. பூச்சிகள்  அழிவதால் இயற்கையான மகரந்த சேர்க்கை பாதிக்கப்படுகிறது. பறவைகளுக்கு  உணவு கிடைப்பதில்  சிக்கல் ஏற்படுகிறது. இதனால்  சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்படையக் கூடும். இதனை தடுக்க வேண்டுமானால் பூச்சிக் கொல்லிகளின் உபயோகத்தைக் குறைத்து இயற்கை விவசாய  முறைகளை பின்பற்ற  வேண்டியது அவசியம். பூச்சிகள்  அளவில்  சிறியதாக  இருக்கலாம் .ஆனால் பூச்சியினம் அழிவதால்  ஏற்படும்   விளைவுகள்   மிகப்  பெரியது  மட்டுமல்ல. ஈடு  செய்ய  முடியாததும்  கூட!

Slider Image
1/23/2019 6:50:13 PM

காற்றை சுத்தப்படுத்தும் செடிகள்!

     தற்போது  காற்று  மாசு  என்பது உலகளாவிய பிரச்சினையாக உள்ளது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. தலைநகர்  டெல்லி மிகவும் அதிக மாசடைந்த   மாநகரங்களில்    முதல்  இடத்தில்  உள்ளது.




  இதனால் மக்கள் தங்கள் இல்லங்களில் காற்று சுத்தப்படுத்தும் உபகரணங்களை (Air Purifier ) பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதில் காற்று மாசு முற்றிலும் நீக்கப் படுவதில்லை. குறிப்பாக மிகவும் ஆபத்தான பென்சீன், குளோரோஃபார்ம் போன்ற கெமிக்கல்களை இந்த உபகரங்களால் எதுவும் செய்ய முடியாது! இந்தக் கெமிக்கல்கள் கேன்சரை  உருவாக்கும்  முக்கிய காரணிகளாகும்.


 


தற்போது வா´ங்டன் பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் “போதோஸ் ஐவி” (Pothos Ivy ) என்ற உள்ளறை தாவரத்தை  ஜீன் மாற்றம் செய்து மேற்கண்ட பாதிப்பு உருவாக்கக்கூடிய   கெமிக்கல்களை  உட்கவர்ந்து  கொள்ளும்  வகையில்  புதிய தாவரத்தை உருவாக்கியுள்ளனர். இத்தகைய  தாவரங்கள் தங்களது வளர்ச்சிக்கு இந்த கெமிக்கலை  பயன்படுத்திக் கொள்கிறது.


 


  இந்த முயற்சி வெற்றி அடைந்தால் வீட்டிற்குள் இருக்கும் காற்றை சுத்தப் படுத்துவதற்கு  மிகவும் உதவியாக இருக்கும். மேலும்  இயற்கையான  முறை  என்பதால் பக்க விளைவுகளும் இருக்காது, என ஆய்வறிக்கைத் தெரிவிப்பதாக சுற்றுச்சூழல் அறிவியல்  மற்றும்  தொழில்நுட்பம்  பத்திரிகைத்  தெரிவிக்கிறது.


 


 

Slider Image
1/4/2019 3:01:44 PM

வேட்டையா டப்படும் சிறுத்தைகள்!

 வன விலங்குகளை குறிப்பாக யானைகள், புலிகள், சிங்கங்கள், காண்டாமிருகம் போன்றவை அவற்றின் மதிப்பு மிக்க உறுப்புகளுக்காவும் மருத்துவ குணத்திற்காகவும் மக்களையும் கால் நடைகளையும் தாக்குவதற்கு பழிவாங்கும் செயல்கள் மூலமாகவும் கொல்லப்படுவது வழக்கமான ஒரு செயலாகிவிட்டது. அந்த வகையில் சிறுத்தைகளும் மனிதர்களின் நடவடிக்கையிலிருந்து தப்பவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1500க்கும் அதிகமான சிறுத்தைகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்பட்டுள்ளதாக வன விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கைப்படி 2015 முதல் 2018 வரை  260  சிறுத்தைகள்  கொல்லப்பட்டுள்ளன. இந்த  வேட்டையில் உத்தராகண்ட் மற்றும்  இமாச்சல  பிரதேசம்  முன்னணியில்  உள்ளது.
 
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர்  உள்ளிட்ட  ஏறக்குறைய 19 மாநிலங்களில் இருந்து இந்த தகவல் மூலம் பெரும்பாலான சிறுத்தைகள் மனிதர்களின் வேட்டைக்கு பலியாகி உள்ளன. சில மாநிலங்களில், குறிப்பாக மஹாராஷ்டிரா, கர்நாடகாவில் இவை சாலை விபத்திலும்  இறந்துள்ளன.
 
சிறுத்தைகள் இந்திய  வன விலங்குகள் சட்டம் (பாதுகாப்பு) 1972ன் படி பாதுகாக்கப் பட்டவையாக  அறிவிக்கப்பட்டிருந்தாலும்  தாக்குதல்கள்  குறைந்தபாடில்லை.
 
மனிதன் ஒவ்வொரு விலங்கினமாக அழித்துக் கொண்டிருந்தால் தனியாக இந்தப் பூமியில் தவிக்கப் போவது திண்ணம்! பல் உயிர் தன்மைதான் பூமிக்கு அழகு. அந்த அழகைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. சிறுத்தைகளை பாதுகாக்க குரல் கொடுங்கள்!

Slider Image
12/27/2018 11:19:52 AM

காற்று மாசும் மனித உயிர்களும்!

 உலக  அளவிலும்  இந்தியாவிலும்  அதிகரித்து  வரும் காற்று மாசு, மற்றும் அதிகரித்து வரும் வளி மண்டல வெப்பநிலை அதிவேகமாக மக்களின் உயிருக்கும், சுற்றுச்சூழல் அழிவிற்கும் வில்லனாக மாறி வருகிறது. இது தொடர்பாக பாரீஸ் ஒப்பந்தம் போடப் பட்டிருந்தாலும்  அதை நடைமுறை படுத்துவதில் இன்னும் குழப்பம் தான் நிலவுகிறது. தொடர் கூட்டங்களும்  இதனை உறுதிப்படுத்த உலக முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், நமது நாட்டில் தற்போது மத்திய சுகாதார அமைச்சகமும் ஏறக்குறைய  100  நிறுவனங்களும்  இணைந்து நடத்திய காற்று மாசு மற்றும் ஆரோக்கியம்  தொடர்பான  ஆய்வு  ஒரு  அதிர்ச்சி  தகவலை  தெரிவிக்கிறது.
 
இந்தியாவில் இறக்கும் 8ல் ஒரு நபர் காற்று மாசினால் இறக்கின்றனர் என்கிறது, இந்த ஆய்வறிக்கை. மேலும் இந்திய மக்களில் 77% பேர் மாசுக் காற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வட இந்திய மாநிலங்கள் இந்த மாசினால் அதிக பாதிப்படைந்துள்ளன. டெல்லி மாநகரம்  காற்று  மாசில்  முதல்  இடத்தில்  உள்ளது,
2017 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 12.4 லட்சம் மக்கள் காற்று மாசினால் உயிர் இழந்துள்ளனர். காற்றில் உள்ள துகள்களின் அளவு, 2,5 மைக்ரானை விட அதிகமுள்ளவை, மிகவும் அதிகமாகும் பொழுது சுவாச மற்றும் இதர நோய்கள் தலை தூக்குகின்றன. மேற்கண்ட இறப்பில் 6.7 லட்சம்  வெளிக் காற்று  மாசினாலும், 4.8 லட்சம் பேர் வீட்டில் உள்ள காற்று மாசினாலும் (சமைத்தலுக்கு விறகுகள், கரிகள் பயன்படுத்துவதன்  மூலம்) இறந்துள்ளதாக  இந்த  அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அளவிற்கு மாசு ஏற்படாமலிருந்தால் இந்தியர்களின் ஆயுள் 1,7 வருடம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறது இந்த அறிக்கை.
 
எனவே, காசுமற்றை குறைக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசரம்.

Slider Image
12/5/2018 12:52:46 PM

கேள்விக் குறியாகும் உணவு பாதுகாப்பு!

 உலகம்  முழுவதும்  ஏறக்குறைய 820  மில்லியன்  மக்களுக்குப்  போதுமான அளவு  உணவு  கிடைக்கவில்லை.  இதனால் ஊட்டச் சத்துக் குறைபாடுகள் அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள்   சபையின் பசி ஒழிப்பு திட்டத்திற்கு காலநிலை மாற்றம் ஒரு பெரியத் தடையாக  இருக்கலாம் என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்    அமைப்பு  தெரிவித்துள்ளது.

வளர்ந்து வரும் மக்கள் தொகையினை உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனில் உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அதிக உணவு உற்பத்தி வேண்டுமெனில் அதிகப்படியான உரம், பூச்சிக் கொல்லிகள், அதிக நீர் தேவை. இதனால் நிலவளமும்  நீர்வளமும்  பாதிக்கப்பட்டு  சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது.           தற்போது உணவு உற்பத்தி போதுமான அளவிற்கு இருந்தபோதிலும் அதிக விலை, மக்களின் குறைவான வாங்கும் திறன், ஏழ்மை மற்றும் உள்நாட்டுப்போர் போன்ற காரணங்களால் ஏமென், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
            மேலும் காலநிலை மாற்றம், விவசாய நிலங்கள் வேளாண் அல்லாத மற்ற பணிகளுக்கு  ஒதுக்கப்படுவது குறிப்பாக நகர்மயமாதல் போன்றவற்றால் வேளாண் உற்பத்தி குறைவதற்கு வாய்ப்புள்ளது. உடனடியாக நிலநீர் வளங்கள் பாதிக்கப்படாமல் போதுமான அளவு உணவு உற்பத்தி செய்யப்படுவதற்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும்  வேளாண் கொள்கைகள் உருவாக்கப்படுவதை அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பசி ஒழிப்பு என்பது கனவாகவே இருக்கும்!

Slider Image
11/28/2018 3:46:06 PM

உயர் தொழில்நுட்பமும் இயற்கையும்

 சில நாட்களுக்கு முன்பு நெதர்லாந்து நாட்டில் 5G  நெட்வொர்க் ஆரம்பிக்கப்பட்டது. அதன் காரணமாக, 5G தொழில்நுட்ப டவர்களிலிருந்து வெளிப்படும் அதிக ஆற்றல் கொண்ட கதிர்வீச்சுக் காரணமாக ஆயிரக் கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ளன. அந்தப் பறவைகளின் உடலில் எந்த விதமான நோய் தாக்குதலோ, கிருமிகளோ இல்லை, எனவே, தொலைப்பேசி டவர்களிலிந்து வெளிவரும் நுண்ணலைகளால் அந்தப் பறவைகளின்  இதயங்கள்  பாதிக்கப்பட்டு  உயிரழந்திருக்கலாம்  என்று  கூறப்படுகிறது.

பீட்டர் கேலிஸ், “சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர்கள்” என்ற அரசு சாரா அமைப்பின், தலைவரின் கூற்றுப்படி இந்த கதிர் வீச்சினால் கேன்சர் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
 
இன்டெர்நெட்டின்  வேகம்  அவசியமா, தொழில் நுட்பம் அவசியமா,  இல்லை சுற்றுச் சூழலும்  உயிர் பாதுகாப்பும் அவசியமா? என்பதை மனிதர்கள் முடிவுசெய்ய வேண்டிய நேரம்  வந்துவிட்டது!

Slider Image
11/17/2018 3:58:38 PM

வி­ஷத்தை சுவாசிக்கும் இந்தியா!

 கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்ட அறிக்கையின்படி உலகின் 93% குழந்தைகள் வி­ஷ­க் காற்றை சுவாசிக்கின்றனர். பத்தில் ஒன்பது பேர் அதிக அளவில் மாசடைந்த காற்றை சுவாசிக்கின்றனர் மற்றும் நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 80% வரையறுக்கப்பட்ட அளவுகளை விட அதிகமான மாசடைந்த காற்றை சுவாசிப்பது  மிகவும்  கவலை  அளிக்க  கூடிய  விஷ­யமாகும்.

நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற வாயுக்கள் மட்டுமின்றி 2.5 மைக்ரானுக்கும் சிறியதான துகள்கள் பெருமளவு காற்று மாசை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய துகள் மாசைப் பொறுத்தமட்டில் இந்தியாவின் 11 நகரங்கள் மிகவும் மோசமான நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு வாகனப் புகைதான் முக்கிய காரணமாகும். கான்பூர் இதில் முதல் இடத்தில் உள்ளது.
 
10 மைக்ரான் அளவுள்ள துகள் மாசைப் பொறுத்தமட்டில் டெல்லி முன்னனியில் உள்ளது.
விறகு சமையல், தாவரத் தண்டுகளை எரிப்பது (பஞ்சாப், ஹரியானா) போன்றவற்றால் கிராமபுற பகுதிகள் மட்டுமின்றி டெல்லி போன்ற பெரு நகரங்களும் பாதிப்படைகின்றன. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைவதுடன் சுவாச நோய்களும்  பெருகி  வருகிறது.
 
மாசுக் கட்டுப்பாட்டை உடனடியாக நடைமுறை படுத்தவிட்டால் மக்களின் வாழ்வே கேள்வி குறியாகி விடும் அபாயம் உள்ளது. இதில் மக்களின் பங்கு அதிகமாக உள்ளது. தொடர்புடைய அனைத்து உறுப்பு நிறவனங்களும் இணைந்து செயல்பட வேண்டியத் தருணம் இது! தென்னிந்திய நகரங்கள் எதுவும் இந்தப் பட்டியலில் இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய வி­யம்.

Slider Image
11/8/2018 3:25:20 PM

பூமி எரிகிறது, நாம் என்ன செய்யப் போகிறோம்!

 தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்களில் எரிக்கப்படும் நிலக்கரி, வாகன எரிபொருளில்  இருந்து  வெளிப்படும்  புகை என அனைத்து உமிழ்வுகளும் பூமியை அழிவுப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வதை மறுக்க முடியாது! இந்த  பசுமைக் குடில் வாயுக்களால் பூமியின் வெப்பநிலை அதிவேகமாக  உயர்ந்து  வருகிறது.

இந்த உயர்வால் ஏற்கெனவே பூமியின் பல பகுதிகளில் அதிக மற்றும் காலநிலை தவறிய மழை அதனால் ஏற்படும் வெள்ளம், வறட்சி, குடிநீர்ப் பிரச்சினை, காட்டு தீ, வெப்ப அலைகள்  என தொடர்ந்து  ஏற்பட்டு  பல் வேறு  இழப்புகளை  உருவாக்கியுள்ளது.
 
இந்த  சூழலைக்  கருத்தில்  கொண்டு 2015-ஆம் ஆண்டில் அமெரிக்கா, இந்தியா, சீனா உட்பட 195 நாடுகள் சேர்ந்து பாரிஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு கையயழுத்துட்டுள்ளது. அதன்படி அதிகரித்து வரும் புமியின் வெப்பநிலை உயர்வு 1.5 சென்டி கிரேட்  தாண்டாதவாறும் அதிகபட்சம் 2 செ என்ற நிலையில் அதை நிறுத்தவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருப்பினும் இதில் எந்த அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது யாருக்கும் தெரியவில்லை! அமெரிக்காவும்  இதில்  அதிக  ஆர்வம்  காட்டவில்லை.
 
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு நடைபெற்ற தென்கொரியாவில் இன்சியான் நகரில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு காலநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட அமைப்பு (Inter Governmental Panel on Climate Change) வெளியிட்டுள்ள சிறப்பு ஆய்வறிக்கை மிகவும் அதிர்ச்சியளிக்க வைக்கிறது.
 
இதன்படி பூமியின் வெப்பநிலை உயர்வு 1.5 செ-க்கு மேல் தாண்டாமல் இருத்தல் வேண்டும் எனவும் இல்லாவிட்டால் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இயற்கை சீரழிவுகள் (வெள்ளம், கனமழை, காட்டுத் தீ மற்றும் அனல் அலைகள்) உணவு உற்பத்தி பாதிப்பு, நோய் மற்றும் ஆரோக்கிய பிரச்சினைகள், குடிநீர்  மற்றும்  விவசாய  பிரச்சினைகள் மிக அதிகமாகும் என எச்சரித்துள்ளது. மேலும்  வெப்பநிலை  உயர்வு  2-செ என்பது  இதைவிட  அதிக  பேரிழிவுகளை  உருவாக்கும்  எனவும்  எடுத்துக்  கூறுகிறது.
 
எனவே வெப்பநிலை உயர்வை 1.5 செ-ல் நிறுத்த வேண்டும் எனில் அனைத்து நாடுகளும் தங்களது நிலக்கரி எண்ணெய் நுகர்வை அதிரடியாக குறைக்க வேண்டும். வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவை குறைக்க திறன் மிக்க தொழில்நுட்பங்களையும் அரசின் கொள்கைகளையும் அதற்கேற்ப மாற்றி அமைக்கவும் தகுந்த நடவடிக்கைகள் உருவாக்கப் பட வேண்டும் ஏற்கெனவே சுமார் 1 செ அளவுக்கு உயர்ந்துள்ள வெப்பநிலை, 2030-2052-க்கு இடைப்பட்ட காலத்தில் தற்போதைய கணக்குப்படி 1.5 செ  ஆக  உயர  வாய்ப்புள்ளது.
 
அவசரத்தை   உணர்ந்து  அனைத்து நாடுகளும் உடனடியாக பூமியைக் காப்பாற்றும் நோக்கில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க உறுதி பூண வேண்டும். இல்லாவிட்டால் உள்ளதும் போச்சே! என்று பின்னர் வருந்த வேண்டியிருக்கும். எல்லாம் அழிந்தபின்  வருந்தி  எந்தப்  பயனும்  இல்லை!
 
“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை
எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்”
 
என்ற வள்ளுவனின் வாக்கு உண்மையாகி விடும்.
 
 
 
 

Slider Image
10/22/2018 12:42:16 PM

உயிரிழக்கும் ஆசிய சிங்கங்கள்!

 உலகம் முழுவதுமே இந்தியா உட்பட வனவிலங்குகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்பட்டு வருகின்றன. சில நாடுகளில் கங்காரு போன்ற விலங்குகளின்  எண்ணிக்கையை  குறைக்க அரசே அவற்றை கொன்று வருகிறது. இது ஒரு  புறமிக்க காரணமில்லாமல் தடீரென விலங்குகள் கொத்து கொத்தாக இறப்பதும் அதிர்ச்சி  அளிக்க  கூடிய  வி­யம்.

அது போன்ற  ஒரு  வி­யம்  தற்போது குஜராத்தில் கிர் சரணாலயத்தில் நடந்துள்ளது. கடந்த  ஒரு  மாதத்தில்  மட்டும்  இது நாள் வரை 23 ஆசிய சிங்கங்கள் திடிரென    இறந்துள்ளன. ஆரம்பத்தில் சிங்கங்களுக்கு இடையே நடைப் பெற்ற சண்டைகள் காரணமாக  இருந்திருக்கலாம்  என்று  கருதப்பட்டாலும்,  மருத்துவ ஆய்வுகள் இனம் புரியாத   Canine Distemper Virus (CDV) வைரஸ்களே  இந்த  இறப்பிற்கு  காரணம்  என்று தெரிவிக்கின்றன.
 
2015 ஆம் ஆண்டு கணக்குப் படி சிங்கங்களின் எண்ணிக்கை  ஏறக்குறைய  500 ஆக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70-80 சிங்கங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்னறன.
 
1994 ஆம் ஆண்டில் தான்சானியாவில் சுமார் 1000 சிங்கங்கள் திடீரென மூன்று வாரங்களில்  உயிரிழந்தது  குறிப்பிடத்தக்கது.  அதற்கு Canine Distemper Virus (CDV) வைரஸ்  காரணமாக  கூறப்பட்டது.
 
இந்தியாவின் கெளரவமாக விளங்கும் ஆசிய சிங்கங்களை காப்பாற்ற தக்க நடவடிக்கை  எடுக்கப்பட  வேண்டும்.
 
ஏற்கனவே நாம் பல வனவிலங்குகளை சமூக விரோதிகளுக்கு பலி கொடுத்துவிட்டோம், என்பதை  நினைவில்  வைக்க  வேண்டும்.

Slider Image
10/22/2018 12:42:14 PM

உயிரிழக்கும் ஆசிய சிங்கங்கள்!

 உலகம் முழுவதுமே இந்தியா உட்பட வனவிலங்குகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப்பட்டு வருகின்றன. சில நாடுகளில் கங்காரு போன்ற விலங்குகளின்  எண்ணிக்கையை  குறைக்க அரசே அவற்றை கொன்று வருகிறது. இது ஒரு  புறமிக்க காரணமில்லாமல் தடீரென விலங்குகள் கொத்து கொத்தாக இறப்பதும் அதிர்ச்சி  அளிக்க  கூடிய  வி­யம்.

அது போன்ற  ஒரு  வி­யம்  தற்போது குஜராத்தில் கிர் சரணாலயத்தில் நடந்துள்ளது. கடந்த  ஒரு  மாதத்தில்  மட்டும்  இது நாள் வரை 23 ஆசிய சிங்கங்கள் திடிரென    இறந்துள்ளன. ஆரம்பத்தில் சிங்கங்களுக்கு இடையே நடைப் பெற்ற சண்டைகள் காரணமாக  இருந்திருக்கலாம்  என்று  கருதப்பட்டாலும்,  மருத்துவ ஆய்வுகள் இனம் புரியாத   Canine Distemper Virus (CDV) வைரஸ்களே  இந்த  இறப்பிற்கு  காரணம்  என்று தெரிவிக்கின்றன.
 
2015 ஆம் ஆண்டு கணக்குப் படி சிங்கங்களின் எண்ணிக்கை  ஏறக்குறைய  500 ஆக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70-80 சிங்கங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்னறன.
 
1994 ஆம் ஆண்டில் தான்சானியாவில் சுமார் 1000 சிங்கங்கள் திடீரென மூன்று வாரங்களில்  உயிரிழந்தது  குறிப்பிடத்தக்கது.  அதற்கு Canine Distemper Virus (CDV) வைரஸ்  காரணமாக  கூறப்பட்டது.
 
இந்தியாவின் கெளரவமாக விளங்கும் ஆசிய சிங்கங்களை காப்பாற்ற தக்க நடவடிக்கை  எடுக்கப்பட  வேண்டும்.
 
ஏற்கனவே நாம் பல வனவிலங்குகளை சமூக விரோதிகளுக்கு பலி கொடுத்துவிட்டோம், என்பதை  நினைவில்  வைக்க  வேண்டும்.

Slider Image
10/8/2018 3:00:19 PM

இன்று கேரளா ! நாளை கொங்கன்!

 கடந்த மாதத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. சில மாதங்களில் ஏற்பட்ட பொருளாதார, இயற்கை அழிவுகளை சரிச்செய்ய பெரும் பணமும் சில ஆண்டுகளும் தேவைப்படலாம். இத்தகையப் பேரழிகளுக்கு, மக்கள் இயற்கையின் மேல் நடத்திய  கொடுந் தாக்குதல்தான்  முக்கிய  காரணம்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இயற்கை பல்லுயிர் பண்முகத் தன்மையைப் பாதுகாக்க மாதவ் காட்கில் மற்றும் கஸ்தூரி ரங்கன் போன்ற சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் கொடுத்துள்ள அறிக்கையில் ஓரளவாவது பின்பற்றுதல் அவசியம்.
 
இன்று கேரளாவிற்கு ஏற்பட்டள்ள நிலைமை, நாளை கொங்கன் (கோவா மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகள்) பகுதியிலும்   ஏற்படாலாம் என்று காட்கில் கூறுகிறார். பூனாவில், பூனே இன்டர்நேஷ்னல் சென்டர் நடத்தி வரும்  ஒரு ஆய்வரங்கில்தான் இவர் இப்படிக் கூறியுள்ளார். இந்தப்  பகுதியின்  சுற்றுச் சூழலை பாதுகாக்க தொழிற்சாலைகளுக்கு தரப்படும் அனுமதிகளை கட்டுக்குள் வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். வி­த்தை உமிழும் தொழிற்சாலைகளை அமைப்பதில் அவசரம் காட்டக்கூடாது என்றும் அத்தகைய முயற்சிகளை கிராமப் பஞ்சாயத்துகள் எதிர்க்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இவற்றையயெல்லாம் பார்க்கும் பொழுது நாம் “கண்களை விற்று சித்திரம் வாங்குகிறோமோ” என்று எண்ணத் தோன்றுகிறது. மக்களின்  விழிப்புணர்வு  இன்றையத் தேவை!

Slider Image
10/3/2018 3:53:48 PM

கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பையை அகற்ற முயற்சி!

 உலகின் மிகப்பெரிய ஆறுகள் கடலில் கொண்டுச் சேர்க்கும் பிளாஸ்டிக் குப்பைகள் அளவிட முடியாத அளவிற்கு கடல் சுற்றுச் சூழலை பாதித்து வருகிறது, கடல் வாழ் உயிரினங்களான மீன், திமிங்கலம், மற்றும் இதர விலங்கினங்களும், தாவர இனங்களும் தங்கள் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

இவற்றையயல்லாம் கருத்தில் கொண்டு நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த   “Ocean Cleanup” என்ற  அரசு சாரா நிறுவனம் பசிபிக் கடலின் பிளாஸ்டிக் குப்பையை அகற்ற முதன் முயற்சியாக ஒரு எந்திரத்தை கடலில் இறக்கியுள்ளது.  தற்போது ஏறக்குறைய 1.8 டிரில்லியன் பிளாஸ்டிக் துண்டுகள் மிதக்கின்றன. அடுத்த 5 ஆண்டுகளில் 50% குப்பையை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
 
வருடத்திற்கு கிட்டத்தட்ட 9 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலைச் சென்றடைகின்றன. எனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி சிறிதாக இருந்தாலும் சில ஆண்டுகளில் கடல் பாதிப்பைக் குறைக்கலாம். எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானது பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதுதான் ஒரே வழி. அது மட்டுமின்றி பிளாஸ்டிக் கழிவுகள் ஆறுகளைச் சென்றடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும்  நமது கடமை  என  சுற்றுச் சூழல்  வல்லுனர்கள் கூறுகின்றனர்.
 

Slider Image
9/26/2018 1:48:21 PM

சத்திழக்கும் தானியங்கள்!

 தற்போது அனைவரும் பசுமைக்குடில் விளைவு பற்றியும் அதற்கான காரணங்களையும் அறிவர். ஆனால் அதற்கு மூலக் காரணமான பசுமைக் குடில் வாயுக்கள்தான் குறைந்தபாடில்லை. தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் நச்சு வாயுக்களின்  அளவு  தொடர்ந்து  அதிகரித்து  வருகிறது.

 

           மேத்யு ஸ்மித் தலைமையிலான ஹார்வர்ட் பல்கலைக் கழக ஆய்வுகுழு ஒன்று அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவலை வெளியிட்டிருக்கிறது. அதாவது, வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்து வருவதால் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் ( அதாவது, கி.பி.2050-ல் ) மக்களின்  முக்கிய  உணவு  தானியங்களான கோதுமை, அரிசி, சோளம், உருளைகிழங்கு, போன்றவற்றில் சத்துக் குறைப்பாடு ஏற்படும்   என  அந்த  ஆய்வறிக்கை  கூறுகிறது.
 
           குறிப்பாக தானியங்களில் உள்ள புரதம், ஜின்க், இரும்புச் சத்து போன்றவை ஏறக்குறைய 17 % குறைய வாய்ப்புள்ளது. இதனால் இந்தியா,சீனா,ஆப்பிரிக்கா,தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்காகிய நாடுகளின் ஏழை மக்கள் சத்துக் குறைப்பாட்டால் கடும் பாதிப்புக்குள்ளாவர், 
          ஜின்க் குறைப்பாட்டால் குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் தன்மை குறையும். வயிற்றுப் போக்கு நோய் அதிகரிக்கும். நுரையீரல் சம்பந்தமான சுவாசக் குறைபாடுகள் தலை  தூக்கும். இரும்புச் சத்து குறைவால் புத்திக் கூர்மை குறைவு மற்றும் அனீமியா, பிரசவத்தின் போது ஏற்படும் தாய் இறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுவாக, உடல், மூளை வளர்ச்சி கடும் பாதிப்பு அடையும். இதனால் இந்தியாவில் 40 - 50 மில்லியன் மக்கள் பாதிக்கப்படக் கூடும், வளர்ச்சி பேரழிவுக்கு அழைத்து   செல்கிறது.  
 
 
இயற்கையைப்  பாதுகாப்போம்,  மனித   இனத்தை   பாதுகாப்போம்!
 

Slider Image
9/14/2018 5:14:28 PM

வழி விடுங்கள்! வாழ விடுங்கள்!

சமீபத்தில், உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில், நீலகிரியில்  அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள 27 ரிசார்ட்களை உடனடியாக  மூடுவதற்கு  உத்தரவிட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் கர்நாடகா தமிழ்நாடு கேரளா மாநிலங்களில் உள்ள பிரம்மகிரி, நீலகிரி, முதுமலை, பண்டிப்பூர், வயநாடு  காட்டுப் பகுதிகளில் சுமார் 6000 க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. யானைகளின் வழித்  தடங்கள் பல  இந்த மாநிலங்களில்  அமைந்துள்ளது, இந்த  வழித் தடங்களில்  காலப்  போக்கில்  அனுமதியின்றி பல கட்டிடங்கள், வீடுகள் மற்றும் ரிசார்ட்டுகள் கண் மூடித்தனமாக கட்டுப்பட்டுள்ளன. மற்றும் தொடர்ந்து எந்த விதமான சட்டம் தொடர்பான அச்சமின்றி இந்த  சட்ட  விரோத  கட்டுமானங்கள்   நடை பெற்று  வருகிறன்றன.
  
            இதுட்டுமின்றி  இந்தியாவில் ரயில் பாதை அமைப்பு, நீர்த் தேக்கங்கள், காடுகள் அழிக்கப்பட்டு பெரிய அளவிலான  தோட்டப் பயிர் எஸ்டேட்டுகள், சுரங்கப் பணிகள், குடியமர்வு போன்றவையும் யானைகளின் வாழிடங்களையும், வழித் தடங்களையும்  மெல்ல அழித்து வருகின்றன. 
            இதனால் யானைகளுக்கு தேவையான  வாழிடங்கள் சுருங்கி  உணவுக்காகவும்,  நீருக்காகவும்  அலைந்து  திரிய  வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. இதனால் மற்ற விலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. தந்தங்களுக்காகவும் ஆண் யானைகள்  கொல்லப்பட்டு வருகின்றன. 
 
             யானைகளையும்  அவற்றின்  வாழிடங்களையும்   காப்பதற்காக  அரசு 1992-ம்  ஆண்டு யானை பாதுகாப்பு  திட்டத்தை தொடங்கியது.  தற்போதைய  நிலவரம்  படி  சுமார் 27.000 யானைகள் இந்தியாவில் உள்ளன. வாழிடங்களும், வழித் தடங்களும் அழிக்கப்படுவதால் யானை - மனிதன் இடையே  மோதல் அதிகரித்து பயிர் சேதமும், உயிர் சேதமும் ஏற்பட்டு வருகிறது. எனவே, உடனடியாக  வனப்பகுதிகளில்  நடத்து  வரும்  அதிகாரப் பூர்வமற்ற   நடவடிக்கைகளை   நாம்   நிறுத்தியாக   வேண்டும்.
 
            வன விலங்குகளில் கம்பீரமான யானையை  நாம்  நம்முடைய குடும்பத்தில் ஒருவராக பாவித்தால் மட்டுமே அவற்றை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும்! அதன் மூலம் பல்லூயிர்  பாதுகாப்பு  உறுதிச்செய்யபடும்!  இல்லாவிட்டால்  யானைகளை எதிர்காலத்தில்  வினாயகர்  சிலைகளில்  மட்டுமே  காணமுடியும்!
 யானைகளையும்  வாழ  விடுங்கள்!
 

Slider Image
9/5/2018 5:28:20 PM

ப்ளாஸ்டிக் என்னும் அரக்கனை ஒழிப்போம்!

 ப்ளாஸ்டிக் என்பது நமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. “நீர் இன்றி அமையாது  உலகு” என்றான் வள்ளுவன். ஆனால், ப்ளாஸ்டிக் இன்றி அமையாது உலகு என்பது இன்றைய மக்களின் குரல். 

அனைத்து பணிகளுக்கும்  ப்ளாஸ்டிக்  உறுதுணையாக  இருப்பினும் இன்று உலகத்தை உருக்குலைக்க வைக்கக்கூடிய நிலையில் ப்ளாஸ்டிக் அரக்கன் தலைவிரித்து ஆடுகிறான். இதன் கொடூரத்தை  நாம் அறிந்த  போதிலும்  அதன் பயனைக் குறைக்க நாம் என்ன செய்திருக்கிறோம்? ஊருக்குத் தான் உபதேசம் ப்ளாஸ்டிக்கை  உபயோகப்  படுத்தாதே  என்று!
 நாம்  எழுதும் பேனாவிலிருந்து பறக்கும் விமானம் வரை எங்குப் பார்த்தாலும் ப்ளாஸ்டிக் மயம். எங்கும்  இறைவன் மயம்  காணாமல்  போய் எங்கும் ப்ளாஸ்டிக் மயம்!  ஒவ்வொரு  ஆண்டும்  இந்தியாவில்  ஏறக்குறைய 16000 டன்னுக்கும்  அதிகமாக ப்ளாஸ்டிக் கழிவு தூக்கி எறியப் படுகிறது. இதில் சுமார் 60 % மட்டுமே மறுசுழற்சி  செய்யப்படுகிறது.மீதம் நிலத்திலும் , நீரிலும்  ஆற்றிலும் குளம் குட்டைகளிலும் கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டப்படும் கழவுகள் அழிவதற்கு நூற்றுக் கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கும். மனிதன் தன்னையும்  தன்  வருங்கால  சந்ததியையும்  காக்க  வேண்டுமெனில், சுற்றுச் சூழலை காக்க வேண்டுமெனில் அதனை மாசுப்படுத்தும் முக்கிய காரணியான ப்ளாஸ்டிகை ஒழிக்க  வேண்டும்.  ஆனால்  அது  முடியுமா!  முடியும், மனம்  இருந்தால்! 
ஒவ்வொரு ஆண்டும் நாம் உலகம் முழுவதும் 300  மில்லியன் டன் ப்ளாஸ்டிக் கழிவுகளை  உற்பதித்திச் செய்கிறோம். அது உலகின் மொத்த மக்கள் தொகையின் எடைக்குச் சமம். இந்தக்கழிவுகள் நீர் ஆதார அமைப்புகளை  கழிவு  நீர்  குட்டைகளாக  மாற்றிவிட்டது. ஆறுகள்  ப்ளாஸ்டிக்கை எடுத்து செல்லும் கருவிகளாக மாறிவிட்டன. நிலத்தில்  கொட்டப்படும்  கழிவுகள்  நிலத்தடி நீரை மாசுப்படுத்துவதுடன் நிற்காமல் நோய்களை பரப்பும் கொசு உற்பத்தி மையங்களாக மாறிவிட்டன. ஆற்றில் காணப்படும் கழிவுகள் கடலில் வாழும் உயிரினங்களை  அழிக்க ஆரம்பித்துவிட்டன. அவற்றின் உடலின் சேர்வது மூலம் நமது உணவுச் சங்கிலியில் நுழைந்து நோய்களை உருவாக்கி வருகிறது. 
இவ்வாறு நிலம், நீர், காற்று, விலங்குகள், நீர் வாழ் உயிரினங்கள், பறவைகள் என  உலகின் அனைத்துப்  பகுதிகளையும் பாதிக்கும்  ப்ளாஸ்டிக் அரக்கனை ஒழிக்க வேண்டியது நமது அனைவரின் கடமை! அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி தக்க நடவடிக்கைகளை நாம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், 
நாம், உலகம்  அழிவதை  நம்   கண்ணால்  காண  வேண்டிய  நாள்  வெகுதூரம்  இல்லை!
 

Slider Image
8/29/2018 7:01:56 PM

அழிவை நோக்கி பூமி !

 உலகமயமாதல்,தொழிற்மயமாதல்,பொருளாதார வளர்ச்சி போன்ற பல்வேறு காரணங்களில் மக்களுக்குத் தேவையான உணவு,உடை இருப்பிடம் வேண்டுமானால் இந்த நூற்றாண்டில் தேவையான அளவிற்கு கிடைத்திருக்கலாம் . ஆனால் இந்த வளர்ச்சி எதை நோக்கி செல்கிறது.உலகம் உயிருடன் இருக்குமா,இருப்பின் எத்தனை ஆண்டுகள்.இது மிகப்பிரிய கேள்விக் குறி.சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் தொடந்து எச்சரித்து வந்த போதும்,சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது.காடுகள் தொடர்ந்து அக்கப்படுகிறது.மக்களுக்கு வேலைத் தேவை.ஆனால் பூமி தேவையில்லையா.நமது அடுத்துவரவிருக்கின்ற தலைமுறை வாழ்வதற்கான காலச்சூழல் இருக்கிறதா 

தற்போது பூமியின் வெப்ப நிலைசராசரியாக, தொழிற்சாலைகள் தொடங்கப்படுவதற்கு முன்பு இருந்ததை விட ஒரு 1° அதிகமாக உள்ளது.ஒவ்வொறு பத்து ஆண்டுகள் சராசரியாக 0.17 செஎன்ற விகிதத்தில் அதிகரித்துவருகிறது. ஆனால் தற்போது கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகம்,ஆஸ்திரேலிய தேசியப்பல்கலைக்கழகம் மற்றும் இதர புகழ் பெற்ற அமைப்புகளைக்சார்ந்த விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி படி பூமியின் வெப்பநிலைவருங் காலத்தில் 4-5 செஉயர்வதற்கு வாய்ப்புள்ளதகவும் இதனால் ஆர்க்டிக், அண்டார்டிகாபகுதியால் உள்ளஐஸ் பாறைகள் உருவதால பல நாடுகளும், தீவுகளும் அழியவாய்ப்புள்ளது.அதிக வெப்ப நிலையால் காடுகள்,விவசாயம், மண்வளம் மற்றும் பல்லுயர்பாதுகாப்பு போன்றவை பாதிக்கப்படக்கூடும். பூமி வாழ்வதற்கு / தகுதியற்றகோளாக மாறக்கூடும்.